ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து வரும் இந்தியர்களுக்கு விசா நடைமுறைகளை.அந்நாட்டு அரசாங்கம் தற்போது ஒரு மிக முக்கியமான கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளது .இனி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விசா கூறி விண்ணப்பிக்கும் நபர்கள் இனி கட்டாயமாக தங்களது கைரேகை மற்றும்,முக அடையாளம் மட்டும் பயோமெட்ரிக் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்பு அமைப்பை மேலும் பலப்படுத்தும், விசா நடை முறைகளின் உள்ள குளறுபடிகளை தவிர்க்கவும் ,இந்தியாவுடன் சேர்த்து மொத்தம் 60 நாடுகளை .இந்த புதிய பயோமெட்ரிக் விதிமுறைகள் கடந்த அக்டொபேர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த புதிய நடைமுறையின் படி அக்.26- க்கு மேல் புதிதாக விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே .இந்த பயோமெட்ரிக் தரவுகளை வழங்க வேண்டும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு இந்த விதி முறை பொருந்தாது .இந்த புதிய பயோமெட்ரிக் சோதனை இரண்டு வழிகளில் சமர்ப்பிக்கலாம்.ஒன்று விண்ணப்பதாரர்கள் நேரடியாக ஆஸ்திரேலிய பயோமெட்ரிக் சேகரிப்பு மையத்திற்கு நேரில் சென்று தங்களுடைய கை ரேகை மற்றும் முக அடையாளைத்தை பதிவு செய்யலாம் .அல்லது ஏற்கனவே தங்கள் பயோமெட்ரிக் தரவுகளை பதிவு செய்து செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் .ஆஸ்டெர்லியன் இன் என்ற அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலமாகவே ,எந்த ஒரு கட்டணமுமின்றி தங்கள் தரவுகளை மிக எளிதாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் .
விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் இந்த அனைத்து பயோமெட்ரிக் தரவுகள் ஆஸ்திரேலிய மற்றும் உள்ளூர் தகவல் பாதுகாப்பு சட்டங்களின் படி மிகவும் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது .புதிய நடை முறையால் .விசாரணங்களுக்கும் தாமதம் ஆகாது என்றும் பயோமெட்ரிக் தருவகளை நீங்கள் எவ்வளவு சீக்கிரம் சமர்பிக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் உங்களுடைய விசா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே இனிமேல் ஆஸ்திரேலியாவுக்கு புதிய விசா அப்ளை செய்பவர்கள் ஆஸ்திரேலிய உள்நாட்டு துறை அனுப்பும் மெயில்களையும் ,வழிமுறைகளையும் சரியாகி பின்பற்றுவது தங்கள் பயோமெட்ரிக் தரவுகளை உடனுக்குடன் பதிவு செய்வது மிகவும் அவசியமாகும் .



