ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு! சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகள் ரத்து

சவுதி அரேபியாவுக்கான விமானச் சேவைகளை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் மேற்கு ஆசிய மோதல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட நகரங்கள், சவுதி அரேபியாவின் ஜெட்டா, ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய நகரங்களுக்கான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நிறுத்தக் கால அவகாசம் , ஜெட்டா விமானச் சேவைகள் நவம்பர் 24, 2026 வரையும், ரியாத் மற்றும் தம்மாம் சேவைகள் நவம்பர் 30, 2026 வரையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

அப்பகுதியில் நிலவும் பதற்றமான சூழல், வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான சலுகை,பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவசமாக மறு-முன்பதிவு (free rescheduling) அல்லது முழுப் பணத்தைத் திரும்பப் பெறும் (full refund) வசதி வழங்கப்பட்டுள்ளது