
வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள்Al Data Centre-களை அமைக்க தடை விதிக்கப் போவதாக, ஆண்டின் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிற நாடுகளில் AI Data Centre-களை அமைத்தால் மிகப்பெரிய வரி விதிக்கப்படும் என அமெரிக்க நிறுவனங்களுக்கு, அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர் மற்ற நாடுகளுக்கு Data Centre-கள் சென்றால், அவற்றை சீனா கைப்பற்றி கொள்ளும்.
எனவே அவற்றை அமெரிக்காவிலேயே வைத்திருக்கப் போகிறோம். இதை மீறும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வரி விதிக்கப்படும். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் தரவு மையங்களைக் கட்டுவதை அனுமதிக்க முடியாது என அவர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், வெளிநாடுகளில் தரவு மையங்களை அமைத்தால் சீனா அவற்றைக் கைப்பற்றவோ அல்லது பயன்படுத்தவோ வாய்ப்புள்ளதாக கவலையையும் வெளிப்படுத்தினார்.
முன்பு செமிகண்டக்டர் உற்பத்தியை வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதித்தது அமெரிக்காவிற்குப் பேரிழப்பாக அமைந்ததைப் போல, AI உள்கட்டமைப்பையும் வெளிநாடுகளுக்குத் தாரைவார்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.



