மகள் ஐஸ்வர்யா குறித்து போலீஸ் கமிஷனரிடம் நடிகர் அர்ஜுன் புகார்

மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு கருத்துக்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜுன் நேற்று புகார் அளித்துள்ளார்
புகாரில் கூறியிருப்பதாவது: என் இளைய மகளின் திருமணத்தின்போது, என் மூத்த மகள் ஜஸ்வர்யாவின் வாழ்க்கை குறித்து (கணவரை பிரிந்துவிட்டதாக) பல்வேறு யூகங்களும், விவதாங்களும் எழுந்தன.

 

ஒரு தந்தையாக, என் மகளையும், அவரது குணத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையும் குறி வைத்து ஆதாரமற்ற மற்றும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது. எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது பொறுப்பற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும். அவதூறு கருத்துக்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.