அர்ஜெண்டீனாவில், 42 வயது பறக்கும் பயிற்றுநர் ஒருவர், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதை அம்போவென விட்டுவிட்டு குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
அர்ஜெண்டீனாவில், யாரும் எதிர்பாராத வகையிலான அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. இப்பகுதியை சேர்ந்த விமான பயிற்றுநரான Leandro Andres-ற்கு 42 வயது ஆகிறது. இவர், தன்னிடம் விமானம் ஓட்ட பயிற்சிக்கு வருபவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். இவருக்கும் விமான ஓட்டுதலில் தகுதி வாய்ந்த அனுபவங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் Leandro Andres, 22 வயது பெண்மணி ஒருவருக்கு விமான பயிற்சி கொடுத்து வந்திருக்கிறார்.
இந்த பெண்ணிற்கு இவர், cessna 150 என்கிற சிறிய ரக விமானத்தில் பயிற்சி கொடுத்து வந்திருக்கிறார். இவர்கள் இருவரும், Toledo என சொல்லப்படும், மத்திய அர்ஜெண்டீனா பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, Leandro திடீரென தன்னுடைய சீட் பெல்ட்டை கழற்றி, தன் ஹெட்செட்டை எடுத்து விட்டு, விமானத்தின் கதவை திறந்து குதித்திருக்கிறார். இத்தனையும் நடக்கும் போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கிறது.
அந்த விமானத்திலிருந்து குதிக்கும் முன்னர் அவர் தன்னுடைய மாணவியிடம் திரும்பி, விமானத்தை இயக்க என்னென்ன செய்ய வேண்டுமென கூறியிருக்கிறார்.
“நீ தொடர்ந்து பறக்க வேண்டும்” எனவும் தெரிவித்திருக்கிறார். “உனக்கு என்ன பண்ணனும்னு தெரியும், carry on” என சொல்லிவிட்டு அவர் சடாரென குதித்திருக்கிறார்.
இது, பெரும் ஷாக்காக அமைந்திருந்தாலும் அந்த பெண் தன்னை தானே அமைதிப்படுத்திக்கொண்டு தான் ஓட்டிய அந்த விமானத்தை எந்த சேதாரமும் இல்லாமல் தரையிறக்கியிருக்கிறார்.
விமானிக்கு என்ன ஆச்சு?
நடுவானிலிருந்து கீழே குதித்த விமானியின் உடல், பின்னர் கண்டெடுக்கப்பட்டது. இந்த மரணம் குறித்து முழு விசாரணை நடத்த சிறப்புக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
பெர்டாசோ பணிபுரிந்த ஃப்ளையிங் பேரட் கோர்டோபா விமானப் பயிற்சிப் பள்ளியின் இயக்குநரான எடுவார்டோ அல்வாரெஸ், இது குறித்து கூறியிருக்கும் தகவல்கள் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அப்படியொரு காரியத்தை செய்யப்போவதாக தங்களுக்கு ஒரு க்ளூவும் இல்லை என்றும், சம்பவம் நடந்த அதே நாளில், வேறு ஒரு மாணவருக்கு நன்றாகவே எந்த பிரச்சனையும் இல்லாமல் ட்ரெயினிங் கொடுத்து விட்டு சென்றதாகவும் பேசியிருந்தார்.
அவர் எப்படிப்பட்ட ஆள்?
விமானத்திலிருந்து குதித்த அந்த விமானி குறித்து பேசுகையில், அனைவருமே அவரை ரொம்பவும் ஜாலியான மனிதர் என்றும், எப்போடும் ஒரு புன்னகையுடன் இருப்பார் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இது தங்களுக்கே ஷாக் ஆக இருப்பதாக கூறும் அவர்கள், தன்னுடன் இன்னொருவர் விமானத்தில் இருக்கும் போதே எப்படி அவரால் இப்படியொரு முடிவை எடுக்க முடிந்தது என்பது புரியவில்லை என கூறி வருகின்றனர்.



