
மேஷ ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுக சங்கடங்களும் விமர்சனமும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு மனக்கசப்பு ஏற்படக்கூடும். என்றாலும் அதனால் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுபிட்சமாக இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மையான பலன் அடைவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பான பலன் பெறுவார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் இறங்குவார்கள். இன்று உங்கள் பலம்: தகுந்த நேரத்தில் முடிவுகள் எடுப்பீர்கள். தொழிலுக்கு உறவினர் உங்களுக்கு உதவலாம். பாசத்தோடு குழந்தைகள் இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: தொழிலில் சில சிக்கல்கள் வரலாம் தன வரவு குறையலாம். வெளியூர் பயணங்கள் சிரமத்தை கொடுக்கலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 எந்த வேலையையும் ஒத்தி போட வேண்டாம். 2 சுறுசுறுப்பாக வேலைகளை தொடங்கி செய்து முடிக்க வேண்டும். 3 குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் இருந்தால் மனம் விட்டு பேசுங்கள். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! மிக மேன்மையான பலன் வந்து சேரும் நாள். எதிலும் நிதானமாக நடப்பது நல்லது. விமர்சனங்களும் மறைமுக எதிர்ப்பும் மற்றவர்களால் ஏற்படக்கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் மறையும். மேலும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை நம்பிக்கையோடு எடுக்கலாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சிறப்பு ஏற்படும். மேலதிகாரியில் பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை கூடி லாபம் அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத வரவுகள் ஏற்படும். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்களில் லாபம் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் இறங்கலாம். இன்று உங்கள் பலம்: தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பீர்கள் நண்பர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கலாம் குடும்பத்தினரின் பாசம் கை கொடுக்கும். இன்று உங்கள் பலவீனம்: எல்லாமே தொழிலில் தேவையில்லாத சிக்கல் வரலாம். பணவிரவு தடைபடும். பயணங்களில் அலைச்சல் கூடும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 திட்டமிட்ட வேலையை தள்ளிப் போட வேண்டாம். 2 தொடங்கிய வேலையை சுறுசுறுப்பாக முடிக்க பாருங்கள். 3 குடும்பத்தில் அன்போடு இருங்கள் அக்கறையாக நடந்து கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும் நாள். எதிலும் கவனமாக நடந்து கொள்வது நல்லது. மறைமுக எதிர்ப்பும் விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுப்பதாக இருந்தால் யோசித்து செய்வது நல்லது. அலுவலகத்தில் கூடுதல் கவனத்தோடு வேலை பார்க்க வேண்டும். வியாபாரத்தில் மந்தமான விற்பனையும் சுமாரான லாபமும் இருக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத செலவுகள் வரலாம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்களை தள்ளி போடவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இன்று உங்கள் பலம்: தொழிலுக்கு தேவையான முடிவெடுப்பீர்கள். நண்பர்களின் ஒத்தாசை உதவலாம். குழந்தைகள் அன்போடு நடந்து கொள்வார்கள். இன்று உங்கள் பலவீனம்: தொழிலில் சில மாற்றங்கள் வரலாம். பணவரவில் தடை இருக்கும். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகும்.. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் சூதாட்டங்கள் ஆகவே ஆகாது. 2 வேலை இடத்தில் பொறுமையும் பொறுப்பும் வேண்டும். 3 ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து ஜாமீன் போட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! சிறப்பான யோகம் வரும் நாள். தொழிலை விரிவுபடுத்துவதில் கவனமாக இருப்பது நல்லது மறைமுக தொல்லையும் விமர்சனங்களும் பாதிப்பை தராது மேலும் வியாபாரத்தில் சிக்கல் எதுவும் வராது குடும்பம் தொடர்பான முடிவுகளை சந்தோஷத்தோடு எடுப்பது நல்லது அலுவலகத்தில் உங்கள் பணி சிறப்பு அதிகரிக்கும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமும் விற்பனையும் ஏற்படும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்களில் நன்மை அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் கை கொடுக்கும். இன்று உங்கள் பலம்: வெளியூர் வாய்ப்புகள் ஈடேறும். சுய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: எதிலும் அவசரப்பட்டு செயல்படுவது. வரவுக்கு மீறி செலவு செய்வது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேலை விஷயத்தில் அலட்சியமாக நடக்க வேண்டாம். 2 திட்டமிட்டு வேலையை முடிக்க பாருங்கள். 3 அன்பாக நடந்து குடும்ப பிரச்சனையை முடிக்க பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! மேன்மையான காரியங்கள் நடக்கும் நாள் இன்று. எந்த வேலையிலும் கவனமாக இருப்பது நல்லது. தொழிலுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகளும் விமர்சனங்களும் மறைந்து போகும். மேலும் பாதிப்பு எதுவும் வராது. குடும்பம் சம்பந்தப்பட்ட முடிவுகளை நன்கு யோசித்து கவனமாக எடுப்பது நல்லது. வேலை இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செலவுகள் குறைந்து வரவு அதிகரிக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்கள் லாபம் தரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். இன்று உங்கள் பலம்: புரிதல்கள் மூலம் நண்பர்களை நெருக்கமாக்குவீர்கள். விவாதங்கள் மூலமாக தொழிலை பலப்படுத்துவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: குழந்தைகள் வழியில் ஏதோ சஞ்சலம் உண்டாகும். கவனமாக வேலை செய்ய முடியாத அளவிற்கு சிந்தனை இருக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 நாளைக்கு என்று வேலையை தள்ளிப் போடக்கூடாது. 2 சுறுசுறுப்பாக இருந்து வேலையை முடிக்க பாருங்கள். 3 குடும்ப சிக்கலை தீர்க்க அக்கறையோடு பேசுங்கள். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! மேன்மையான பலன்கள் நடக்கும் நாள். தொழில் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபார எதிர்ப்புகளும் விமர்சனங்களும் மறைந்து போகும். மேலும் வளர்ச்சியும் ஏற்படும். குடும்பத்தில் இருந்த மனக்குழப்பம் அகலும். குதூகலம் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முடிவுகளை கவனமாக எடுப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. விற்பனையும் லாபமும் தேவையான அளவு இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த லாபம் அடைவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்கள் நன்மை தரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். இன்று உங்கள் பலம்: தொழிலுக்கு தேவையான வெளிநாட்டு உதவிகள் வந்து பேரும். உங்கள் திட்டங்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: ஏதாவது இடையூறு ஏற்பட்டு கவனத்தை சுவர் அடிக்கலாம். வீட்டில் மனைவி புரிந்து கொள்ளாமல் நடக்கலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுக்கக் கூடாது. 2 முக்கியமான காரியங்களை தள்ளிப் போடக்கூடாது. 3 உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! விருப்பப்பட்ட காரியங்கள் நடக்கும் நாள். மனதளவில் திருப்தியான சூழல்கள் உருவாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணி புரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு வியாபாரத்திற்கு உதவி செய்யும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கும் நிலை உண்டாகும். வாகன யோகம் சித்திக்கும். தன தானிய லாபம் அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மைகள் உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் வந்து சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும் . இன்று உங்கள் பலம்: புதிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் ஏதேனும் தாய் வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: கடன் சம்பந்தப்பட்ட விஷயம் மனதை சங்கடப்படுத்தும். ஆரோக்கியத்தில் ஒரு விதமான சோர்வு ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணிபுரியும் இடத்தில் கவனச் சிதறல் ஆகாது. 2 மற்றொரு விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். 3 சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! மிக உயர்வான பலன்கள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சிறு பிரச்சனை உண்டாகலாம். அதனால் பெரிய சிக்கல் எதுவும் இருக்காது. குடும்ப பிரச்சனைகள் தொடர்பான முடிவுகளை நிதானமாக எடுப்பது நல்லது. அலுவலகத்தில் மிக கவனமாக வேலை செய்ய வேண்டும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சிறப்பாக இருக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பாராத பண வரவு ஏற்படலாம் அனுஷம் வெளியூர் பயணங்கள் லாபம் தரலாம். கேட்டை நட்சத்திரக்காரர்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறலாம். இன்று உங்கள் பலம்: மிக நிதானமாக முடிவு எடுப்பீர்கள் நண்பர்கள் உங்கள் தொழிலுக்கு உதவலாம் மனைவி அன்போடு இருப்பார். இன்று உங்கள் பலவீனம்: வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாக தான் தொழில் சுமாராக நடக்கலாம் வியாபாரம் சவாலாக நடக்கலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அக்கறையில்லாமல் வேலை பார்க்க வேண்டாம். 2 குறித்த நேரத்தில் வேலையை முடிக்க பாருங்கள். 3 மனம் விட்டு பேசி குடும்ப குழப்பத்தை தீருங்கள். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! மிதமான நன்மைகள் வீடு தேடி வரும் நாள். எதிலும் அவசரம் காட்டாமல் நடப்பது நல்லது. தொல்லையும் விமர்சனங்களும் மற்றவர்களால் மறைமுகமாக ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு குழப்பம் ஏற்படலாம். என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் வராது. குடும்பம் சம்பந்தப்பட்ட முடிவுகளை நன்றாக யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் கவனமுடன் வேலை செய்ய வேண்டும். வியாபாரம் சுமாராக நடக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பாராத செலவுகள் வரலாம். பூராட நட்சத்திரக்காரர்கள் வெளியூர் பயணம் சிரமம் தரலாம். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இன்று உங்கள் பலம்: தொழில் நுட்ப நுட்பத்தோடு முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு வியாபாரத்திற்கு உதவலாம். குடும்பத்தினர் அன்போடு இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: தொழிலில் சில இடையூறுகள் வரலாம். தன வரவு குறையலாம். வெளியூர் பயணங்கள் சிக்கல் ஏற்படுத்தலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொழில் சிந்தனைகளின் தீர்க்கமான கவனம் வேண்டும். 2 ஆன்லைன் சூதாட்டங்கள் ஆபத்தை உண்டாக்கும். 3 வரவு செலவு கணக்குகளை சரிபார்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! வெற்றிகரமான காரியங்கள் நடக்கும் நாள். பொறுமையை கடைப்பிடித்து செய்யும் வேலைகளில் நல்லது நடக்கும். மறைமுக தொல்லையும் மற்றவரின் விமர்சனங்களும் மறைந்து போகும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படலாம். அதனால் சிக்கல் எதுவும் இருக்காது. தொழில் தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும்போது பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. கூடுதலான கவனத்தோடு அலுவலகத்தில் பணி செய்ய வேண்டும். வியாபாரத்தில் லாபமும் விற்பனையும் அதிகரிக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வாகன யோகம் உண்டாகும். இன்று உங்கள் பலம்: திட்டமிட்டு செம்மையாக முடிவெடுப்பீர்கள். தொழிலுக்கு பெரியோர் ஆதரவு உண்டு. குடும்பத்தினர் நேசத்தோடு இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வெளியூர் பயணங்களில் சிரமங்கள் வரலாம். செலவுகள் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் எதிர்ப்புகள் தோன்றலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 எந்த வேலையையும் தள்ளிப் போட வேண்டாம். 2 மள மள வென்று வேலையை செய்து முடிக்க பாருங்கள். 3 சமூகமாக பேசி குடும்ப பிரச்சனையை தீர்க்க பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! நல்ல காரியங்கள் நடக்கும் நாள். தொழிலுக்கு மறைமுக எதிர்ப்பு உண்டாகும். அது சாமர்த்தியமாக களையப்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். மந்தமான வியாபாரம் சுறுசுறுப்பாகும். தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம். இருந்தாலும் கட்டுக்குள் இருக்கும். வேலை இடத்தில் தடுமாற்றம் உண்டாகலாம். அலுவலகத்தில் உங்கள் பணி கவனத்துடன் இருக்க வேண்டும். விற்பனை லாபம் சுமாராக இருக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான செயல்கள் நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு தன தன வரவு உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: முக்கியமான நேரத்தில் முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்களும் உறவினர்களும் தொழிலுக்கு உதவலாம். மனைவியும் குழந்தைகளும் பாசத்தோடு இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: தொழிலில் சில சிரமங்கள் வரலாம். வரவுகள் குறையலாம். வெளியூர் பயணங்கள் சங்கடம் தரலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வீட்டு வேலைகளை ஒத்தி போட வேண்டாம். 2 சுறுசுறுப்பு குறையாமல் வேலையை முடிக்க பாருங்கள். 3 மனம் விட்டு பேசி குடும்ப பிரச்சினையில் தீருங்கள். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! ஏற்ற இறக்கமான காரியங்கள் நடக்கும் நாள். வியாபாரத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழிலுக்கு மறைமுக தொல்லையும் விமர்சனங்களும் மற்றவர்களால் ஏற்படக்கூடும். சிறிய குழப்பம் குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். அதனால் பாதிப்பு ஏற்படாது. கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு அவசர செலவுகள் ஏற்படக்கூடும்.. உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தேவையான வருமானம் அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் வெளிநாட்டு வாய்ப்பு கைகூடும். இன்று உங்கள் பலம்: எதிர்பார்த்த அரசாங்க உதவி வந்து சேரும். வெளிநாட்டு நண்பரின் ஆதரவு பலத்தை கொடுக்கும். இன்று உங்கள் பலவீனம்: அலைச்சல் காரணமாக மனச்சோர்வு உண்டாகும். அரசாங்க காரியம் சற்று தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வங்கி வரவு செலவு சரியாக கையாளப்பட வேண்டும் 2 நெருங்கிய உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். 3 குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம் தேதி 6 – கார்த்திகை – பராபவ வருடம் ஞாயிறு நாள் ஞாயிறு திதி திரயோதசி (up to November 23, 2:37 am) சதுர்தசி (up to November 23, 11:42 pm) நட்சத்திரம் ரேவதி (up to 5:54 am) அஸ்வினி (up to November 23,4:15 am) பரணி (up to November 24,2:02 am) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 7:45 – 8:45 am / 3:15 – 4:15 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11.45 am / 1:30 – 2:30 am இராகு காலம் மதியம்ா 4.30 – 6.00 எமகண்டம் மதியம் 12.00 – 1.30 குளிகை மதியம் 3.00 – 4.30 சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் சந்திராஷ்டமம் அஸ்தம் சூரியோதயம் 6:14 AM சூரிய அஸ்தமனம் 5:35 PM சந்திரோதயம் Nov 22 3:33 PM சந்திர அஸ்தமனம் Nov 23 4:33 AM



