அந்தி சாய்ந்த வேளையில், நாள் முழுவதும் உழைத்துக் களைத்துப்போன மாறன், வீட்டின் வாசலில் அமைதியாக அமர்ந்திருந்தான். அவன் சட்டைப் பையில் இருந்த பணத்தை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தான். வீட்டுச் செலவு, குழந்தையின் பள்ளிக் கட்டணம், அம்மாவின் மருந்து, மனைவியின் தேவைகள், கடன் என அவன் மனதில் கணக்குகள் ஓடிக்கொண்டிருந்தன. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை. ஆனால், குடும்பத்தின் முகத்தில் சிரிப்பு குறையக்கூடாது என்பதற்காக அவன் தினமும் தன்னை மறந்து உழைத்துக் கொண்டிருந்தான்.நாணயம் மாற்று
அப்போது குழந்தை ஓடிவந்து, “அப்பாஸ நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வரணும்ஸ அதுதான் எனக்கு வேண்டும்” என்றது. அந்த வார்த்தை அவன் உள்ளத்தைத் தொட்டது.
குழந்தைக்காக நேரம் செலவிட முடியாத தன் வாழ்க்கையை நினைத்து கண்கள் கலங்கின. உள்ளே சென்றபோது, அம்மா, “மருந்து வாங்கிட்டியா?” என்று கேட்டார். பணம் போதாததால் வாங்க முடியவில்லை. இருந்தாலும் புன்னகையுடன், “நாளைக்கு வாங்கிடுறேன் அம்மாஸ” என்றான். அந்தப் பொய்யைச் சொல்லும்போது அவன் தொண்டை அடைத்தது.
மனைவி எதுவும் கேட்காமல் உணவைப் பரிமாறினாள். அவள் கண்களில் இருந்த கேள்விகளை மாறன் புரிந்துகொண்டான். அவன் சாப்பிடாமல் பல இரவுகள் தூங்கியதும், தன் தேவைகளை ஒதுக்கி குடும்பத்திற்காக ஓடியதும் அவளுக்குத் தெரியும். ஆனால், இருவரும் எதுவும் பேசவில்லை. சில நேரங்களில் அமைதியே ஆயிரம் வார்த்தைகளைவிட அதிகமாக வலிக்கும்.குழந்தை பொருள் வாங்கு
அனைவரும் தூங்கிய பிறகு, மாறன் மட்டும் விழித்திருந்தான். குழந்தையைப் பார்த்தான்; அம்மாவைப் பார்த்தான்; மனைவியைப் பார்த்தான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவன் மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது: “வீட்டை யோசிப்பதா? தாயை
யோசிப்பதா? தாரத்தை யோசிப்பதா? பிள்ளையை யோசிப்பதா? எல்லோரையும் யோசிக்கும் நான்ஸ என்னை எப்போது யோசிப்பது?”
ஒருகாலத்தில் அவனுக்கும் கனவுகள் இருந்தன. ஆசைகள் இருந்தன. ஆனால் “எனக்கு” என்று தொடங்கிய ஒவ்வொரு ஆசையும், “என் குடும்பத்திற்கு” என்று முடிந்தது. அவன் வாங்க நினைத்த சட்டை குழந்தையின் கட்டணமாக மாறியது. அவன் சேமிக்க நினைத்த பணம் அம்மாவின் மருந்தாக மாறியது. அவன் வாழ நினைத்த வாழ்க்கை, குடும்பத்தின் வாழ்க்கையாக மாறிவிட்டது.குடும்பச் சுற்றுலா
இறைமக்களேஸ உங்கள் வீட்டில் குடும்பத்திற்காக அமைதியாகப் போராடும் அந்த மனிதனைப் புரிந்துகொள்ளுங்கள். அவர் சிரிப்பதால் அவருக்கு வலி இல்லை என்று நினைக்காதீர்கள். அவர் பேசாமல் இருப்பதால் அவருக்கு கவலை இல்லை என்றும் எண்ணாதீர்கள். அவருக்கும் அன்பு தேவை; ஊக்கம் தேவை; “நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என்று சொல்லும் ஒரு வார்த்தை தேவை.
அதே நேரத்தில், குடும்பத் தலைவர்களே, உங்கள் குடும்பத்திற்கு பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல உங்கள் பொறுப்பு; அன்பு செலுத்துவதும், நேரம் கொடுப்பதும், பொறுமையுடன் வழிநடத்துவதும் உங்கள் கடமை. உங்கள் குடும்பம் உங்கள் சம்பாத்தியத்தால் மட்டும் அல்ல; உங்கள் அன்பாலும், ஜெபத்தாலும், நல்ல
இறைமக்களே, ஒருவரை ஒருவர் குறை கூறுவதற்கு முன், ஒருவருடைய மனதை ஒருவர் புரிந்துகொள்ளுங்கள். வார்த்தைகளைக் கேட்பதைவிட, அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் வலியை உணருங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களின் மனதைப் புரிந்து செயல்படுங்கள். “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” (பிலிப்பியர் 2:4,5) என இறைவேதம் கூறுகிறது.



