மேஷ ராசி அன்பர்களே! உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். தொழிலில் உங்களுடைய விருப்பப்படி முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் உங்களைத் தேடி வரும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் அதிகமான லாபத்தை கொடுக்கும். நண்பர்களின் உதவி உறுதுணையாக இருக்கும். வெளியூர் பயணங்களில் நல்ல பயன் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். உங்களின் உதவி ஒரு குடும்பத்தை காப்பாற்றும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வரவு அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரத்தை பெருக்குவார்கள். இன்று உங்கள் பலம்: உங்கள் விருப்பப்படி பொருளாதார உயர்வு உண்டாகும். அரசாங்க உதவி தானாக தேடி வரும். இன்று உங்கள் பலவீனம்: அடுத்தவர் துன்பத்தை கண்டு மனம் வாடுவீர்கள். ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. வியாபாரத்தை கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டும். 2. வேலையாட்களை ஓரளவு தான் நம்ப வேண்டும். 3. மனைவி மனம் புண்படாமல் நடந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். உங்களின் பண தேவைக்கு நண்பரின் உதவி கைகொடுக்கும். சொந்த பந்தங்களுடைய அன்பு தாராளமாக கிடைக்கும். வியாபாரம் நல்ல விதமாக நடக்கும். தொழில் போட்டிகள் மறைந்து போகும். வேலை இடத்தில் மதிப்பு உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். லாட்டரி பந்தயங்கள் ஓரளவு கை கொடுக்கும். திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை அனுபவம் பெறுவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவியில் மேன்மை அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியம் வெற்றியாகும். இன்று உங்கள் பலம்: நீங்கள் எடுக்கின்ற முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலையில் பாராட்டுகள் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: சில நேரங்களில் சோம்பேறித்தனமாக வேலை செய்வீர்கள். ஆடம்பர செலவு வரும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவுக்கு மீறி செலவு செய்வது வருமானத்தை பாதிக்கும்.. 2 வேலை அதிகமானாலும் வேளா வேளைக்கு சாப்பிட வேண்டும். 3 பொய்யான செய்திகளை உண்மை என்று நம்பக்கூடாது. அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! தொழிலில் சற்று கண் திருஷ்டி பாதிப்பு உண்டாகும். வியாபாரம் மந்த நிலையில் காணப்படும். அவசரத்திற்கு நண்பர்களின் உதவி கிடைப்பது அரிது. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வேலை இடங்களில் தேவையில்லாத சிக்கல் உருவாகலாம். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். குலதெய்வ வழிபாடு மன நிம்மதியை கொண்டு வரும். வீட்டில் மனைவியின் பேச்சு உயர்ந்து நிற்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பான பலனடைவர். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்ததை முடிப்பார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரத்தில் லாபமடைவார்கள். இன்று உங்கள் பலம்: வேலையில் உள்ள அனுபவம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நண்பரின் உதவி கை கொடுக்கும். இன்று உங்கள் பலவீனம்: வியாபாரத்தில் திடீர் பிரச்சனையை சந்திப்பீர்கள். உறவினர்களின் தொல்லை சிக்கல் ஏற்படுத்தலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேலை இடத்தில் கவனச்சிதறல் கூடாது. 2 மனைவியின் ஆசையை அலட்சியப்படுத்துவது. 3 இணைய மோசடியில் எச்சரிக்கையாக இருப்பது. அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! குலதெய்வத்தினுடைய அருள் உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் உங்கள் புத்திசாலித்தனத்தால் தீர்க்கப்படும். தொழில்துறையில் வருமானம் பெருகும். தொழில் துறையில் இருந்த போட்டிகள் மறையும். நீண்ட நாள் பார்க்காத நண்பர் வீட்டுக்கு வருவார். குடும்பம் பிள்ளைகளோடு சுப நிகழ்ச்சிக்கு செல்கின்ற வாய்ப்பு ஏற்படும். வேலை இடத்தில் எதிர்பாராத உயர்வு உண்டாகும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்ததை நடத்துவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணவரவு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வருமானம் பெருகி பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும். தொழிலில் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: ஆத்திரப்பட்டு வார்த்தைகளை கொட்டி விடுவீர்கள். சில நேரம் வேலையில் சிரத்தை இல்லாமல் இருப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 உங்கள் விஷயத்தில் மற்றவர் தலையிடுவதை தடுக்க வேண்டும். 2 மனைவியின் மனம் வேதனைப்படாத அளவுக்கு நடந்து கொள்வது. 3 சாப்பாட்டு விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருக்கக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! வராது என்று நினைத்த பணம் கிடைத்து துணிவை கொடுக்கும். வியாபாரத்தில் உங்கள் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை கொண்டு வரும். தொழிலில் போட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். உங்களுக்கு தெய்வ அனுக்கிரகம் எப்போதும் உண்டு. முன்னோர்கள் நல்லாசியோடு உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பாராத இடத்திலிருந்து கூட உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய நபரை சந்திப்பார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்புகள் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மைகள் அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: வியாபார பெருக்கத்திற்காக திட்டம் தீட்டி வெற்றி பெறுவது. உறவுகளும் நட்புகளும் உங்களுக்கு உதவுவது. இன்று உங்கள் பலவீனம்: உங்களை அறியாமலேயே சில நேரம் மனக்கவலை ஏற்படும். குடும்பத்தில் உங்கள் செயல் தவறாக புரிந்து கொள்ளப்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொழில் போட்டியாளர்களுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 உறவினர்களிடம் மனம் புண்படாமல் நடக்க வேண்டும். 3 மின்சார சாதனங்களை கவனமாக கையாள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! உடல்ரீதியாக சின்ன சின்ன தொந்தரவுகள் துன்பப்படுத்தும். வியாபாரத்தில் லாபமும் நஷ்டமும் கலந்தே நடக்கும். தொழில் எதிரிகளின் முயற்சி தோல்வியில் முடியும். வருமானத்தை பெருக்குவதற்கான முயற்சிகள் கொஞ்சம் தாமதமாகும். வேலை இடத்தில் ஓவர் டைம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வர தாமதமாகும். உறவினர் உங்களுக்கு உதவியாக நிற்பார். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனம் சலிப்படைவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தனலாபம் குறையும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிக்கல் வந்து விலகும். இன்று உங்கள் பலம்: தோல்விகளை கண்டு கலங்க மாட்டீர்கள். முயற்சியால் எதிலும் வெற்றி அடைவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்க சுணக்கமாகும். வெளியூர் பயணம் தள்ளிப்போகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவு செலவு கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும். 2 ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது. 3 மனைவி கேட்டதை மறக்காமல் வாங்கி வர வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! வேலை இடத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். உங்களின் திறமைக்கேற்ப ஊதிய உயர்வும் பதவி மாற்றமும் ஏற்படும். நீங்கள் நினைக்கின்ற காரியத்தை செய்து முடிக்கின்ற வழி அமையும். உறவினர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரம் அதிகரித்து கையில் பணம் தாராளமாக புரளும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு காரியம் விருத்தியாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அடைவார்கள். இன்று உங்கள் பலம்: எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி பெறுவீர்கள். பண வரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: செலவுகள் அதிகமாகி சிரமப்படுத்தலாம். கணக்கு வழக்குகளை சரி செய்யாததால் சின்ன சிரமம் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கடன் கொடுப்பதில் அவசரப்பட வேண்டாம். 2 மனைவியிடம் பேசும் போது கோபத்தை குறைக்க வேண்டும். 3 அன்புத் தொல்லைகள் அதிகமாகும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
அவசியமில்லாத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். பணத்தின் மதிப்பை உணரும் நேரம் இது. சேமிப்பை அதிகரிக்க வழிகள் கிடைக்கும். தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். பூர்வீக சொத்து பிரச்சனை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் உண்டாகும். குடும்பத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடக்கும். மனைவியின் ஒத்துழைப்பு உங்களுக்கு உற்சாகம் தரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு பதவி உயரும் அனுஷம் நட்சத்திரக்காரர்கள் செல்வம் பெருகும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நடக்கும். இன்று உங்கள் பலம்: உத்தியோகத்தில் உங்கள் சேவை சிறப்பாக இருக்கும். வரவு அறிந்து செலவு செய்கின்ற குணம் செல்வத்தை பெருக்கும். இன்று உங்கள் பலவீனம்: உள்ளத்தில் உள்ளதை வெளியே சொல்ல முடியாமல் தவிப்பீர்கள். எதிர்பார்த்த காரியத்தில் சிறிய தடங்கல் வரும் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வியாபாரத்தில் ஏற்படும் குறையை கவனமாக நீக்க வேண்டும். 2 வேஷம் போடுகின்ற மனிதர்களை அடையாளம் காண வேண்டும். 3 தொழிலில் வரும் இடையூறுகளை கண்காணிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசுகிறது. இறைவன் அருளால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பெரியவர்களின் அன்பும் ஆசியும் உங்களுக்கு துணையாக நிற்கும். வேலை இடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வருமானம் பெருகும். அரசாங்க பதவி உறுதியாகும். உங்கள் உண்மையான உழைப்புக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். பிள்ளைகளால் நிம்மதி பிறக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு தன லாபம் கூடும். பூராட நட்சத்திரக்காரர்கள் கடன்கள் வசூலாகும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் கேட்டது கிடைக்கும். இன்று உங்கள் பலம்: உங்களுக்கு தேவைப்பட்ட உதவியை நண்பர் செய்ய தயாராக இருப்பார். உங்கள் பேச்சுக்கு உறவினர்கள் மதிப்பு கொடுப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: நினைத்ததை செய்ய முடியாமல் ஒரு காரியத்தில் சின்ன இடையூறு ஏற்படும். வருமானம் வந்தாலும் அதை சேமிக்க முடியாது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 போலியான நண்பர்களிடம் நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. 2 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். 3 நஷ்டம் வராமல் வியாபாரத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! நல்லதே நடக்கும். கேட்டதெல்லாம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். தொழில் விரிவாகி வருமானம் பெருகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய், தந்தையரின் ஆசி உங்களுக்கு பாதுகாப்பாக அமையும். நண்பர்கள் உங்களின் நலனை காக்க உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்களுக்கும் உங்களுக்கும் சுமூகமான போக்கு காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் நல்ல பலன் பெறுவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் பதவி உயர்வு அடைவார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் பொருள் ஆதாயம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: நினைத்ததெல்லாம் தடையில்லாமல் நடக்கும். தொழிலும் வியாபாரமும் உயர்ந்து வருமானம் பெருகும். இன்று உங்கள் பலவீனம்: ஒரு நல்ல விஷயம் குறித்த செய்தி வர தாமதமாகும். அரசாங்க வேலையில் ஈடுபட முடியாமல் மனம் தடுமாறும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கண் திருஷ்டி பாதிப்பு உங்களுக்கு அதிகமாக உள்ளது. 2 அரசாங்க வேலையில் மேலதிகாரிகள் சொல்படி நடக்க வேண்டும். 3 சரியான முறையில் வியாபாரம் நடக்கிறதா என்று கவனத்தில் கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! உங்கள் மனசுக்கு பிடிக்காத சில விஷயங்கள் நடக்கலாம். வியாபாரத்தில் கொஞ்சம் மந்தம் ஏற்பட்டு பணவரவு கம்மியாகும். சனி பகவான் அருளால் வரவேண்டிய சில துன்பங்கள் நீங்கும். உங்களுக்கு தொல்லை தந்த உறவினர் மனம் மாறுவார். தொழிலில் இருந்த எதிர்ப்புகள் தன்னால் விலகி ஓடும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குலதெய்வத்தின் அருள் உங்கள் குழப்பங்களுக்கு தீர்வு கொடுக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்ப்புகள் மாறும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பண வரவு இருக்கும். இன்று உங்கள் பலம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பது உங்களுக்கு மிகப்பெரிய பலம். உறவினரின் ஒத்தாசையும் தடையில்லாமல் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: வேலையின் காரணமாக நேரத்திற்கு சாப்பிட முடியாமல் போகும். வெளியே உங்கள் மரியாதை அதிகரித்தாலும் வீட்டிற்குள் சற்று குறைவுதான். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொலைபேசி அழைப்புகளை நம்பி பண பரிவர்த்தனை செய்ய வேண்டாம். 2 பெண் நண்பர்களிடம் சற்று விலகியே இருப்பது நல்லது. 3 மின்சாரப் பொருட்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
இன்று மள மள என்று காரியம் நடக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத யோகம் அடிக்கும். உங்களுக்கு பில்லி சூனியம் வைக்க நினைத்தவர்களின் சாகசம் பலிக்காது. உங்கள் கையில் பணம் காசு தாராளமாக புழங்கும். நடக்குமா என்று சந்தேகப்பட்ட முக்கிய காரியம் எளிதாக நடக்கும். அரசுத்துறை வேலையில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். சனி பகவான் அருளால் புதிய வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் ஏற்படும். அண்ணன் தம்பி பிரச்சனை முடிவுக்கு வரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வம் பெருகும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் கனவுகள் நனவாகும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் எதிர்பார்த்தது நடக்கும். இன்று உங்கள் பலம்: மன உறுதியால் தொழிலை மேம்படுத்தி லாபம் பார்ப்பீர்கள். அரசு அலுவலக நண்பர் உதவி செய்ய தயாராக இருப்பார். இன்று உங்கள் பலவீனம்: நியாயமான பிரச்சனையாக இருந்தால் பிடிவாதமாக நடந்து கொள்வீர்கள். அதில் வருகின்ற இழப்புகளை பொருட்படுத்த மாட்டீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட காரியங்களில் நிதானம் தேவை. 2 ரொக்க பணத்தை கொண்டு செல்லுகின்ற பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 3 உங்கள் வீட்டு பிரச்சனையை வெளியில் சொல்லாதீர்கள். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம் தேதி 22 – புரட்டாசி – பராபவ வருடம் வெள்ளி நாள் வெள்ளி திதி சதுர்தசி (up to 9:36 pm) அமாவாசை (up to October 10, 9:20 pm) நட்சத்திரம் உத்திரம் (up to 9:19 pm) அஸ்தம் (up to October 10,9:42 pm) யோகம் சித்த-அமிர்த யோகம் நல்ல நேரம் 9:15 – 10:15 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 12:15 – 1:15 am / 6:30 – 7:30 pm இராகு காலம் காலை 10.30 – 12.00 எமகண்டம் மதியம் 3.00 – 4.30 குளிகை காலை 7.30 -9.00 சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம் சூரியோதயம் 6:02 AM சூரிய அஸ்தமனம் 5:50 PM சந்திரோதயம் Oct 09 4:36 AM சந்திர அஸ்தமனம் Oct 09 4:55 PM



