மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 29- ஜூலை -2026

மேஷம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். கையிருப்பு கரையக்கூடும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம்.

கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்ப உறுப்பினர்களுக்குள் இருந்த கருத்து மோதல் விலகி சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு போட்டிகளை எளிதாக சமாளிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுண்டு. மேலதிகாரி பாராட்டுவார்.

விருச்சிகம்: எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவார்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

தனுசு: சகோதர சகோதரிகளால் ஆதாயமுண்டு. பேச்சில் தெளிவு பிறக்கும். முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல் பேச்சு கேட்பர். தாயாரின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: ஏதோ ஒரு விஷயமாக முன்கோபம், டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பர். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

மீனம்: சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். உங்கள் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட பணியை முடிப்பீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

பராபவ – ஆடி 13 | புதன்கிழமை

திதி: பௌர்ணமி இரவு 8.06 வரை. பிறகு தேய்பிறை பிரதமை.

நட்சத்திரம்: உத்திராடம் பிற்பகல் 3.37 வரை. பிறகு திருவோணம்.

நாமயோகம்: பிரிதி இரவு 11.57வரை. பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: விஷ்டி காலை 7.15 வரை. பிறகு பவம்.

நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1.30-3, மாலை 4-5.

யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 3.37 வரை.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

சந்திராஷ்டமம்: திருவாதிரை பிற்பகல் 3.37 வரை. பிறகு புனர்பூசம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53.

அஸ்தமனம்: மாலை 6.37.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00