உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்19 பேர் பலியாகினர்

x

உக்ரைன் தலைநகர் மீது நேற்று அதிகாலை வரை ரஷ்யா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 19 பேர் பலியாகினர். மேலும் 60 பேர் காயமடைந்தனர். உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று முன்தினம் இரவு ரஷ்யா தாக்குதல் நடத்தியது. போடில்ஸ்கி மாவட்டத்தில் குடியிருப்பு அல்லாத கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் ஏவுகணைத் தாக்குதலால் வாகனப் பழுதுபார்ப்பு நிலையமும் தீப்பற்றியது. ஒபுகிவ் மாவட்டத்தில் மூன்று உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் சேதமடைந்தது.

ரஷ்யாவின் டிரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளும் சேதமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலை வரை கீவ் மற்றும் 12 பகுதிகள் மீது ரஷ்யா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்களில் மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 60பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.