ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணியாது: 2வது நாளாக தாக்குதல்

 

அமெரிக்கா ஈரானைத் தாக்கினால், நிச்சயமாகத் திருப்பித் தாக்குவோம், அமெரிக்கா வீணாகப் போராடி மேலும் சிக்கலில் மூழ்க வேண்டாம் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணியாது, ஈரானின் முன்னெடுப்பின் கீழ் மட்டுமே திறக்கப்படும் என்றும் திட்டவட்டம்.

ஈரான் மீது 2வது நாளாக தாக்குதலை தொடங்கியது அமெரிக்க ராணுவம்
ஈரானின் முக்கிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் சரமாரி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா நிதியுதவி செய்துவந்த சாபஹார் துறைமுகப் பகுதிகள், பந்தர் அப்பாஸ், சிரிக் நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியுள்ளது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி 22 நாட்களே ஆன நிலையில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.