முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும், நாட்டின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (07) புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுக்கு முன்னதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் ஷிரந்தி ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வங்கியொன்றிலிருந்து 10 மில்லியன் ரூபா தொகையை பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் முறைகேடு, ஊழல் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உத்தியோபூர்வ தகவல்கள் பின்னர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



