வவுனியாவை சேர்ந்த ஆசிரியையான வனிதா சேனாதிராஜா மின்னேரியா பகுதியில் விடுதியில் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்த ஆசிரியை வவுனியாவை மையப்படுத்தி பல்வேறு கலை இலக்கியச்செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்த ஒருவர் என கூறப்படுகின்றது.
ஆசிரியையின் மரணத்திற்கான காரணம் வெளியாத நிலையில் அவரது மரணம் தொடர்பாக மின்னேரியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



