உக்ரைனின் 900 டிரோன்களை சுட்டுவீழ்த்திய ரஷ்யா

ரஷ்யாவின் பல பகுதிகள், கிரிமியா தீபகற்பம் மற்றும் அசோவ் கடல் பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் ஒரே இரவில் அனுப்பிய சுமார் 900 ட்ரோன்களை தடுத்து அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள ஒரு பெரிய எரிபொருள் கிடங்கு தீப்பற்றி எரிந்ததாகவும், இருவர் உயிரிழந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் மாஸ்கோவை நோக்கி வந்த 650 ட்ரோன்களில் பெரும்பாலானவற்றை வழியிலேயே சுட்டுவீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் காரணமாக ரஷ்யா டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளதால், சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், உக்ரைனின் சபோரிஸியா நகரில் உள்ள டுனீப்பர் ஆற்றுப் பாலத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.