ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்தியது யார் ?வணிக கப்பல் மீது தாக்குதல்

 

ஹார்முஸ் நீரிணை பகுதியில் வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவங்கள் நடத்திய தாக்குதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதன் தொடர்ச்சியாக, ஹார்முஸ் நீரிணை பகுதியை நிர்வகிப்பதில் ஈரான், அமெரிக்கா இடையே மோதல் நீடித்து வருகிறது. கச்சா எண்ணெய் எடுத்து செல்லப்படும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவதில் மோதல்கள் நீடிப்பதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிபொருள்கள் விலை உயர்ந்துள்ளன.

இந்த சூழலில் ஹார்முஸ் நீரிணை அருகே சென்று கொண்டிருந்த வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம், கெஷ்ம் தீவுகளின் கடற்கரைக்கு அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர் என ஈரான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. யார் தாக்குதல் நடத்தியது என்ற விவரங்கள் வௌியாகவில்லை.