30-க்கும் மேற்பட்ட உயிர்கள்! கரையொதுங்கும் சடலங்கள்

 

கிழக்கு லிபியாவின் மத்திய தரைக்கடல் கடலோரப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு சிறுமி உட்படக் குறைந்தது 15 அகதிகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தப்பிப் பிழைத்த பத்து நபர்கள் அளித்த தகவலின்படி அந்தப் படகில் மொத்தம் 61 பேர் வரை பயணித்ததாகக் கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எகிப்து நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள டோப்ருக் என்ற நகரத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாகவும் கடலில் மேலும் பல உடல்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

2011 இல் நேட்டோ ஆதரவுடன் நடந்த கிளர்ச்சியில் முஅம்மர் கடாபி வீழ்த்தப்பட்டதற்குப் பிறகு வறுமை மற்றும் உள்நாட்டுப் போர்களில் இருந்து தப்பி ஐரோப்பாவிற்குச் செல்ல முயலும் ஆப்பிரிக்க அகதிகளின் முக்கியப் பயணப் பாதையாக லிபியா மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது