வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டு தலம் எனவும், அங்கு 11 அடி புத்தர் சிலை இருந்தது என சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் சனிக்கிழமை சென்றிருந்தனர்.
மலை பகுதிக்கு சென்ற தேரர் தலைமையிலான குழுவினர் சூளம் இருந்த பகுதியில் ஓன்றரை மணிநேரம் பிரித்து ஓதி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அதுவரை சைவ மக்களை மலை உச்சிக்கு செல்ல வேண்டாம் என்று பொலிசார் கூறியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர்,
வெடுக்குநாறிமலை ஒரு பௌத்த வழிபாட்டு தலம், இங்கு கடந்த 2012 ற்கு முன்னர் 11அடி புத்தர் சிலை இருந்தது. அது எங்களிடம் உள்ளது. மீண்டும் அதனை இங்கு நிறுவப் போகின்றோம்.
சைவ வழிபாடு 2013 இற்கு பின்னரே வந்தது. தமிழர்கள் போலி நம்பிக்கையில் வழிபடுகின்றனர் என மேலும் தெரிவித்தார்.



