நோர்வேபோக்குவரத்து அமைச்சராக தமிழர் கம்சி குணரத்தினம்

 

நோர்வேயின் தற்போதைய தொழிலாளர் கட்சி அரசு தனது அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்திருக்கிறது இன்று 11.09.2026.

தற்போதைய போக்குவரத்துதுறை அமைச்சர் Jon Ivar Nygரூrd பதவியிலிருந்து மாற்றப்பட்டு

புதிய அமைச்சரவையில் நோர்வேயின் புதிய போக்குவரத்து துறை அமைச்சராக கம்சி குணரத்தினம் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கம்சி அவர்கள் இன்னும் வாக ஓட்டுனர் உரிமம் (Driving Licence) எடுக்கவில்லை, வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாதவர் நோர்வேயின் புதிய போக்குவரத்து துறை அமைச்சரா என்ற தொனியில் நோர்வே ஊடகங்களில் காலையில் சில செய்திகள் கண்ணில் பட்டன.

அது புதிது அல்ல, ஏற்கனவே 1997 களில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த Odd Einar Dல்rum அவர்களிடமும் ஓட்டுனர் உரிமம் இருந்திருக்கவில்லை.

இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து தனது 3 வயதில் நோர்வேயில் குடியேறிய கம்சி அவர்கள், நோர்வேயின் தொழிலாளர் கட்சி ஊடாக நோர்வேயின் அரசியலில் இணைந்தார்.

புதிய அமைச்சரவையில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் கம்சி அவர்கள், நோர்வேயின் முதலாவது தமிழர் பின்னணியை கொண்ட அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஏற்கனவே நோர்வேயின் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற முதல் தமிழர் என்ற பெருமையும் அவருக்கானதே.

வாழ்த்துக்கள் கம்சி குணரத்தினம்