விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அலங்கார பொருட்கள் விற்பனை நேற்று களைகட்டியது. அதே நேரத்தில் பூ, பழம், வாழை இலை விலை அதிகரித்தது. அதிகாலை முதல் கோயில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்மிக கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
விநாயகர் பெருமான் அவதார திருநாளான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் பூஜை பொருட்களை வாங்க நேற்று முன்தினம் மாலை கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. கடந்த ஆண்டை விட விலை அதிகமாக இருந்த போதிலும் பொருட்படுத்தாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். மேலும் பூ, பழம் விற்பனை படுஜோராக நடந்தது.



