மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 24-ஆகஸ்ட் 2026

 

மேஷம்: குடும்பத்தில் சலசலப்புகள் ஓய்ந்து அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கு விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். கலைப் பொருட்கள் சேரும்.

ரிஷபம்: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். வீடு, கடையை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரம் திருப்திகரமாக அமையும். எதிலும் பொறுமை தேவை.

மிதுனம்: குடும்பத்தில் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பணத்தை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். அலுவலக விஷயமாக அலைச்சல், அசதி ஏற்படும்.

கடகம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு பாராட்டு கிடைக்கும்.

சிம்மம்: இழுபறியாக உள்ள பிரச்சினைகளில் இருந்து விடுபட மாற்று வழியைக் கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு, ஆரோக்கியம் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படு வீர்கள். பெற்றோர் உடல்நலம் சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

துலாம்: உங்களது வெளிப்படையான, சாதுர்யமான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் ஏற்படும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல் சோர்வு, வயிற்று வலி குணமாகும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் பொறுமை அவசியம்.

தனுசு: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். திடீர் பயணம், அலைச்சல், அசதி இருந்தாலும், ஆதாயமும் உண்டு. பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும்.

மகரம்: புதிய மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்கள் சந்திப்பும், அதனால் ஆதாயமும் உண்டாகும்.

கும்பம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். வெளியூர் பயணம் திருப்தி தரும்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண், செலவைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் பிரச்சினைகள் ஓயும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ஆவணி 07 – திங்கள்கிழமை

திதி: துவாதசி நாள் முழுவதும்.

நட்சத்திரம்: பூராடம் இரவு 8.28 மணி வரை, பிறகு உத்திராடம்.

நாமயோகம்: பிரிதி காலை 7.03 வரை, பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: பவம் பிற்பகல் 3.11 வரை, பிறகு பாலவம்.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, 6.00-7.00.

யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

அஸ்தமனம்: மாலை 6.25.

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3

பரிகாரம்: தயிர்