ஜப்பான் நாட்டு நிலநடுக்கம் 30க்கும் மேற்பட்டோர்

 

ஜப்பான் நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 2 மணியளவில் தலைநகர் டோக்கியோவுக்கு வடகிழக்கில் உள்ள தெற்கு இபராகி மாகாணத்தில் 70 கிமீ(42 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், அமெரிக்க வானிலை ஆய்வு மையம் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக டோக்கியோவில் 15 பேர், சைதாமாவில் 9 பேர், கனகாவாவில் 8 பேர், சிபாவில் 4 பேர் மற்றும் இபராகியில் ஒருவர் என 37 பேர் காயமடைந்தனர்.

மேலும் நிலநடுக்கத்தின் அதிர்வு காரணமாக டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் இணைப்பு குழாய்கள் உடைந்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன், டோக்கியோ மற்றும் நரிட்டா விமான நிலையத்தை இணைக்கும் விரைவு ரயில்கள் மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களுக்கான உள்ளூர் ரயில்கள் சேவைகளில் தாமதம் ஏற்பட்டன.