மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 07 செப். 2026

 

மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு, இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்வீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி பழைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பீர்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

கடகம்: எடுத்த காரியங்கள் தடைபட்டு முடியும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிம்மம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபார வளர்ச்சிக்காக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். காரியத்தில் நிதானம் தேவை.

கன்னி: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். பண வரவு, பொருள் வரவு உண்டு. வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

துலாம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெரிய நிறுவனத்தில் வேலை அமையும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரம் லாபம் தரும். பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: ஒதுங்கிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வாகனத்தை மாற்றுவீர்கள். எதிலும் பொறுமை தேவை.

தனுசு: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்கப் போராடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. ஜாமீன் கையெழுத்திடுவது, வேலைக்கு சிபாரிசு செய்வது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்: குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பண வரவு உண்டு.

கும்பம்: அரசுக் காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளி வட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

மீனம்: இழுபறியாக இருந்த பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ஆவணி 21 | திங்கள்கிழமை

திதி: ஏகாதசி மாலை 5.05 மணி வரை, பிறகு துவாதசி.

நட்சத்திரம்: புனர்பூசம் மாலை 6.14 வரை, பிறகு பூசம்.

நாமயோகம்: வியதீபாதம் காலை 6.40 வரை, பிறகு வரீயான்.

நாமகரணம்: பவம் காலை 6.17 வரை, பிறகு பாலவம்.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, 6.00-7.00.

யோகம்: அமிர்தயோகம் மாலை 6.14 வரை, பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

சந்திராஷ்டமம்: மூலம் மாலை 6.14 வரை, பிறகு பூராடம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

அஸ்தமனம்: மாலை 6.15.

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3

பரிகாரம்: தயிர்