சென்னையில் பிரியாணி டபராவில் பெண்ணின் உடலை வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் இருந்து ஆக்ரா ரயில் வந்து இறங்கிய மர்ம சூட்கேஸ்சை திறந்து பார்த்த போது அழுகிய நிலையில் கிடந்த சடலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அப்போது சூட்கேஸ்ஸில் கண்ணில் பட்ட பிளாஸ்டிக் பையை,ஆதாரமாக கொண்டு,சென்னை விரைந்த போலீஸ் என அடுத்தடுத்து திருப்பம் நிறைந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வழக்கின் பின்னணி:
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆக்ரா வந்தடைந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், தலை மற்றும் சில பாகங்கள் இல்லாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் அடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பை மூலம் தடயம் பிடித்த காவல் துறையினர் சென்னை சென்ட்ரல் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஒரு ஆண் மற்றும் பெண் சென்ட்ரல் நிலையத்திற்குள் சிவப்பு நிற சூட்கேஸுடன் வந்து ரயிலில் வைத்துவிட்டு, அது புறப்படுவதற்கு முன்பே இறங்கி கூடுவாஞ்சேரி சென்றது கண்டறியப்பட்டது.
வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கொடூர தடயங்கள்:
கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியதால் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, வீடு முழுவதும் ரத்தக்கறைகள் படிந்திருந்தன. பெரிய பாத்திரத்தில் உடற்பாகங்கள் மைதா மாவு, காய்கறிகளுடன் வேகவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கொலையாளிகள் யார்?
ஒடிசாவைச் சேர்ந்த மாணிக் லஸ்கர், பகவதி மாஜி ஆகிய தம்பதியரும், அவர்களுடன் தங்கியிருந்த ஐதுல் நிஷா என்ற பெண்ணும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். ஐதுல் நிஷாவிற்கும் மாணிக் லஸ்கருக்கும் ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது தப்பியோடிய இருவரின் செல்போன் எண்களை வைத்து காவல்துறையினர் ஒடிசா விரைந்துள்ளனர். விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



