வணிக கப்பல்களை தாக்கிய ஈரான்…! போரை தீவிரப்படுத்த போவதாக அமெரிக்கா எச்சரிக்கை

 

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல் மூலம் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த தங்களது இரண்டு வணிக எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) தகவல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை ஈரான் தான் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் ஈரான் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த போவதாக அமெரிக்கா எச்சரித்து உள்ளது. மேலும் ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை காலவரையறையின்றி நீட்டிக்க முடியும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீதான தாக்குதல் சர்வதேச விதிகளுக்கு எதிரான செயல் எனவும், ஹோர்முஸ் நீரிணையில் தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வரும் ஈரானைத் தனிமைப்படுத்த அதன் மீதான நிதி மற்றும் பொருளாதார அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்த போவதாகவும் அமெரிக்கா உறுதிபட தெரிவித்து உள்ளது.