கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “ஹீ ஈஸ் எ மான்ஸ்டர்” (Monster) அதாவது அசுர சாதனையாளர் என்று குறிப்பிட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போது இந்த சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. வெள்ளை மாளிகையின் வாகனப் பாதையில் செய்தியாளர்களிடம் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை இவர் ஒரு பெரிதாக அறியப்படாத மான்ஸ்டர் என்றும், அவர் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகையின் நுழைவுப் பாதையில் செய்தியாளர்களிடம் பேசுமாறு சுந்தர் பிச்சையை டிரம்ப் அழைத்த போது டிரம்ப் ஊடகங்களை நோக்கி, “இவர் ஒரு மான்ஸ்டர் (இமாலய சாதனையாளர்), ஆனால் இவரை யாருக்கும் (பொதுவெளியில்) தெரியாது. அவ்வளவு அருமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்! இவ்வளவு பெரிய சக்தியாக இருந்தும், தினமும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லாததால், சுந்தர் பிச்சையைப் போன்ற தொழில்நுட்பத் துறைத் தலைவர்கள் மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்கின்றனர் என அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார்.
பின்னர் ஊடகத்தினரிடம் பேசிய டிரம்ப் இவரது பெயரை நினைவில் கொள்ளுங்கள். “இவரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் ‘சுந்தர்’ என்பதுதான். சுந்தர் என்பதுதான் அவரது பெயர்,” என்று கூறினார். அரசியல்வாதிகளைப் போலப் பொதுமக்களிடம் பெரிய விளம்பரம் இல்லாமல், அதே சமயம் தொழில்துறையில் பிரம்மாண்ட ஆதிக்கம் செலுத்துபவர் என்ற அர்த்தத்தில் டிரம்ப் சுந்தர் பிச்சை ஒரு “மான்ஸ்டர்” என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்



