அதிர்ஷ்டமாத ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 23ம் தேதி

 

ஆகஸ்ட் மாதத்தின் 17 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலான காலத்தில், சூரியன் தன்னுடைய சொந்த ராசியான சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக கூடிய நிகழ்வு, தொடர்ந்து புதன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து புத ஆதித்யா யோக பலனை தர உள்ளனர். அது மட்டுமல்லாமல் குரு மீண்டும் உதயமாகி உச்ச பலனை தர உள்ளார். இந்த வாரத்தில் கிரகங்களின் அமைப்புகளால் சில ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு பல்வேறு விதத்தில் நேர்மறையான பலன்கள் வாரி வழங்க உள்ளனர். எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த வார காலத்தில் உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பெற்ற அமர உள்ளார். இதன் காரணமாக தந்தையின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள். உங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியான மற்றும் செழிப்பு நிறைந்த காலமாக இருக்கும். மேலும் இந்த வாரத்தில் பணியிடத்தில் உங்களுடைய பொறுப்புக்களை தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள்.

 

குறிப்பிடத்தக்க லாபம் உங்களுக்கு சேரக்கூடியதாக இருக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகளும் அதிகமாக இருக்கும். அதை சுப செலவுகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடவும். உங்களுடைய உடல் நலம் தொடர்பாக இருந்த பிரச்சினைகள் நீங்கி அதில் முன்னேற்றம் ஏற்படும். இந்த வார இறுதியில் உங்கள் நண்பர்களுடன் இனிமையான தருணங்களை கழிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்:

சூரிய பகவானின் “ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாதேஜாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்”. என்ற காயத்ரி மந்திரத்தை ஜபிக்கவும்.

ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த வாரத்தில் மங்களகரமான பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். குறிப்பாக உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரன் அமைப்பு மற்றும் சூரியனின் ஆட்சி பெற்ற தன்மை காரணமாக முன்னேற்றம் நிறைந்திருக்கும். உங்களுடைய முதலீடு தொடர்பான முயற்சிகளில் பல நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையை தொடர்பாக மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

 

குறிப்பாக உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடவும், அவர்களின் ஆலோசனை பெறவும் வாய்ப்புகள் கிடைக்கும். இதன் காரணமாக மனதளவில் இருந்த கவலைகள், அழுத்தம் நீங்கும். வார இறுதியில் உங்களுடைய நண்பர்களுடன் நேரம் செலவிடவும், அவர்களின் முழு ஆதரவு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமைகளில் உப்பு உட்கொள்வதைத் தவிர்க்கவும். மேலும், சூரிய பகவானின் மந்திரங்களை ஜபிக்கவும்.

கடக ராசி அன்பர்களுக்கு தனஸ்தானத்தில் சூரியனின் பெயர்ச்சி மற்றும் புதனின் பெயர்ச்சி நடக்க உள்ளன. அதேசமயம் உங்களுடைய ராசியில் குரு உச்சம் பெற்று அமர்வதும், உதயமாகவும் உள்ளார். இதன் காரணமாக இந்த வாரத்தில் உங்களுக்கு நிதிநிலை ரீதியாகவும், பணியிடத்தில் சாதகமான நல்ல மாற்றங்களும் ஏற்படும். குறிப்பாக குடும்பத்தினரின் அன்பை ஆதரவையும் பெறுவீர்கள்.

 

அதேபோல பணியிடத்தில் மூத்த நபர்கள் அல்லது அனுபவம் வாய்ந்தவர்களின் ஆதரவும், வழிகாட்டுதல் உங்களுடைய பணிகளை வேகமாகவும், சிறப்பாகவும் முடிக்க உதவும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் நிலவக்கூடிய காலம். அது அவர்களின் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகளையும் பெற்று தரும்.
பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் தேவைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மற்றும் கடலைப்பருப்பு ஆகியவற்றை தானமாக வழங்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த வாரத்தில் சூரியன் மற்றும் குருவின் அருள் கிடைக்க கூடியதாக இருக்கும். இந்த கிரகங்களின் அமைப்பு காரணமாக மங்களகரமான சில விஷயங்கள் வீட்டில் நடக்கும். குறிப்பாக தொழில் செய்யக்கூடிய அன்பர்களுக்கு முன்னேற்றமும், வேலையில் இருக்கக்கூடிய குழப்பங்கள், அழுத்தங்கள் குறையும். மேலும் உங்களுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை தொடர்பாக இனிமையான சூழலை தரும்.

 

துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய நிதி நிலைமை மேம்படும்.. குடும்பத்தில் சில நல்ல விஷயங்களும், தொடக்கங்களும் அமையும். நெருங்கிய உறவினர்கள் அல்லது அனுபவசாலிகள் உதவி உங்களுக்கு கிடைக்கும். வார இறுதியில் ஒரு பெண்ணின் ஆதரவு, உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நல்லெண்ணத்தையும் கொண்டுவரும். ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்:

‘ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்யவும்; இது உங்கள் கௌரவத்தை உயர்த்தும். ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும்.

மகர ராசி அன்பர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தின் இந்த வாரத்தில் நல்ல பலன்கள் அதிகம் கிடைக்கும். குறிப்பாக உங்களுடைய காதல் வாழ்க்கையில் உறவு வலுவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மேலும் பெரியவர்களின் அன்பை ஆசிர்வாதத்தையும் பெறுவீர்கள். முக்கிய பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக திட்டமிடுவீர்கள்.

 

​பணியிடத்தில் உங்களுடைய முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான லாபம் தரக்கூடிய சூழல் உருவாக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் பெற்ற மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
பரிகாரம்
தினமும் கணபதி வழிபாடு செய்வதும், குரு வழிபாடு செய்வதன் நன்மை தரும்.