தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும் தெற்கு லெபான் மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. நேற்று அதிகாலையில் இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதல்கள், தெற்கு நகரமான நபாதியேவின் சில பகுதிகளையும், அங்கு செல்லும் முக்கிய சாலைகளையும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அலி தாஹெர் குன்றையும் தாக்கியுள்ளன.
போர் நிறுத்தம் இருந்தபோதிலும், லிட்டானி நதிக்கு வடக்கே உள்ளதும், லெபானானில் நடைமுறை எல்லையாக விளங்குவதுமான அந்த பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நாள்தோறும் தாக்குதல்களை தொடர்கிறது. அன்சார் கிராமத்தில் எல்லையில் உள்ள வீடு ஒன்று குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர்.



