மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படை போர்க்கப்பலை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படை (IRGC), பிராந்தியக் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படை கப்பல் மீது இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
இருப்பினும், அமெரிக்க கடற்படை இந்த தாக்குதல்களில் இருந்து வெற்றிகரமாக தப்பித்தது என்றும், அமெரிக்க வீரர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சென்ட்காம் (CENTCOM) தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் பதிலடியாக, ஓமன் வளைகுடாவில் ‘எம்/டி காவிஸ்’ (M/T Kaviz), ‘எம்/டி சர்மினார்’ (M/T Charminar), ‘எம்/டி ஹரைசன் 1’ (M/T Horizon 1) மற்றும் ‘எம்/டி ரீஸ்கோ’ (M/T Riesco) ஆகிய எண்ணெய் கப்பல்களையும், கார்க் தீவுக்கு அருகே ‘எம்/டி தர்யா’ (M/T Derya) ஆகிய கப்பலையும் அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அழிக்கப்பட்ட ஈரானிய கப்பல்கள், ஓமான வளைகுடாவில் இருந்த கிவிக, சார்மினார், ஹொரைசன் 1 மற்றும் ரீஸ்கோ ஆகியவை என்று மத்திய கட்டளை பிரிவு கூறியது. ஹார்முஸ் நீரிணையில் உள்ள கார்க் தீவுக்கு அருகில் இருந்த டெரியா என்ற கப்பலையும் அமெரிக்க ராணுவம் அழித்துள்ளது.



