பயங்கர நிலநடுக்கம்:132பேர் உயிரிழப்பு, கொலம்பியாவில் கட்டிடங்கள் இடிந்து சேதம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 132 பேர் பலி!

கொலம்பியாவின் மேற்கே ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 132 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 570 பேர் காயமடைந்துள்ளனர். கொலம்பியாவின் மேற்கே சான் ஜோஸ் டெல் பால்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தலைநகர் பொகோட்டாவிலிருந்து சுமார் 150 மைல் தொலைவில் அமைந்திருந்ததுடன், பொகோட்டாவிலும் இதன் அதிர்வு கடுமையாக உணரப்பட்டது.

இதனால் அங்கு எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்புக் கருதி வீதிகளுக்கு வெளியேறி தஞ்சமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், காலி நகரில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவுக் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு தேசிய பேரிடரைப் பிரகடனப்படுத்தி, அப்பகுதியில் ராணுவ வீரர்களைக் களமிறக்கியுள்ளது.

இதனிடையே, கொலம்பியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; ‘நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை தீவிர உதவிகளை வழங்கி வருகிறது’ என தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொலம்பியாவுக்கு சுற்றுலா செல்வதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொலம்பியா நாட்டின் மேற்குப் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன; இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, தலைநகர் பொகோடாவிற்கு மேற்கே சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் (San Josளூ del Palmar) பகுதிக்கு அருகில், பூமிக்கு அடியில் 107 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. 7.4 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் பொகோடா, ஆன்டிலியோகா, மெட்டா உள்ளிட்ட பல பகுதிகளிலும் வலுவாக உணரப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடான ஈக்வடாரிலும் இதன் அதிர்வுகள் எதிரொலித்துள்ளன.

 

ஆரம்பத்தில் நிலநடுக்கத்தின் அளவு 7.4 என்று பதிவாகியிருந்த நிலையில், நிலநடுக்கவியல் அமைப்புகள் கூடுதல் தரவுகளை ஆராய்ந்து வருவதால் இந்த அளவுகளில் மாற்றங்கள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர கால மீட்புக் குழுவினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதால், உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.