இடையே போர் தொடங்கி சுமார் நான்கரை ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்த போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சமீப நாட்களாக இருநாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், சக்திவாய்ந்த கிளைடு குண்டுகள் மற்றும் ஜெட் இயக்க டிரோன்கள் மூலமாக ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. கீவ், ஜபோரிஜியா, ஒடெசா, சுமி மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் குடியிருப்பு வீடுகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலம் போரிஸ்பில் மாவட்டத்தில் உள்ள கிடங்கின் மீது ரஷ்யாவின் டிரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். கீவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் 4 பேர் காயமடைந்தனர். இதே நேரத்தில் உக்ரைனின் நீண்ட தூர டிரோன்கள் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. தெற்கு கிராஸ்னோடர் பிராந்தியத்தில் உக்ரைனின் டிரோன் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.



