விமான விபத்து,, அமெரிக்காவில் 8 பேர் பலி

 

 

மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர ரேடார் தளத்தில் எட்டு பேருடன் வாடகை விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் மேற்கு அலாஸ்காவின் கேப் நியூவென்ஹாம் நீண்ட தூர ரேடார் தள விமான நிலையத்தில் 8 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த விமானி உட்பட 8 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு அமெரிக்க ராணுவம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இது நமது ராணுவக் குடும்பத்திற்கும் நாம் சேவை செய்யும் சமூகங்களுக்கும் ஒரு பேரழிவு இழப்பாகும் என்று அமெரிக்க விமானப்படை லெப்டினன்ட் ஜெனரல் ராபர்ட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.