ஹார்முஸ் ஜலசந்தியில் 20 அமெரிக்க போர்க் கப்பல்கள் முகாமிட்டிருப்பதால் பதற்றம்

 

ஈ​ரானுடன் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரும் நிலை​யில், பாரசீக வளை​குடா மற்​றும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகு​தி​யில் அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்களை நிலைநிறுத்​தி​யுள்​ள​தால் பதற்​றம் தொடர்​கிறது.

இருதரப்பு இடையி​லான மோதலை தவிர்க்க ஈரானுடன் பேச்​சு​வார்த்​தைகள் நடை​பெற்று வரு​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரு​கிறார். அதே வேளை​யில், சர்​வ​தேசக் கடல்​சார் வர்த்​தகப் பாதைகளுக்கு இடையூறு விளைவித்​தால் கடும் விளைவு​களைச் சந்​திக்க நேரிடும் என்​றும் ஈரானுக்கு அவர் கடுமை​யான எச்​சரிக்​கை விடுத்​துள்​ளார்.

இந்த நிலை​யில்​தான் உலகின் மிக முக்​கிய​மான எண்​ணெய் போக்​கு​வரத்​துப் பாதை​யான ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகச் செல்லும் கப்​பல்​களுக்கு ஈரானிய கடற்​படை​யால் ஆபத்து நேரிடக் கூடாது என்​ப​தற்​காக, அமெரிக்கா தனது 20 போர்க்​கப்பல்​கள் மற்​றும் விமானம் தாங்கி கப்​பல்​களைப் பிராந்​திய எல்லைக்கு அருகே கொண்டு வந்​துள்​ள​தாக ட்ரம்ப் தெளிவுபடுத்தி​யுள்​ளார். அமெரிக்க பாது​காப்​புப் படைகளின் இந்த நகர்​வு, ஈரானுக்​குக் கொடுக்​கும் நேரடி அழுத்​த​மாகவே பார்க்​கப்​படு​கிறது.

ஒரு​புறம் பேச்​சு​வார்த்​தைக்​கான கதவு​கள் திறந்​திருப்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டாலும், மறு​புறம் போர்க்​கப்​பல்​கள் அணிவகுத்து நிற்​கும் சூழல் மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் பெரும் போர் பீதியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இரு நாடு​களுக்​கும் இடையி​லான இந்த மோதல் போக்​கு, உலகளா​விய கச்சா எண்​ணெய் சந்தை மற்​றும் வர்த்​தகத்​தில் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

போர் மரணங்களுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும்” – ட்ரம்ப் புதிய நிபந்தனை

ஈரானின் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அமெரிக்கர்களுக்கு ஈரானிடம் இருந்து இழப்பீடு கோரப்படும் என்றும், வருங்காலப் பேச்சுவார்த்தைகளில் இது முக்கிய நிபந்தனையாக சேர்க்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் பிரதிநிதிகள் கோரியதாகத் தெரிவித்த ட்ரம்ப், அதற்குப் பதிலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானின் சாலையோர வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் பல்வேறு மோதல்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் கடுமையாகக் காயமடைந்தவர்களுக்காக ஈரானிடம் இழப்பீடு கோருகிறேன். யூ.எஸ்.எஸ் கோல் போர்க்கப்பல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், போர்களில் பலியான ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்களுக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 50 ஆண்டுகளில் ஈரானில் நடைபெற்ற போராட்டங்களின் போது அந்நாட்டு அரசால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் பலியான 52,000 பேரின் குடும்பங்களுக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானுடன் அமெரிக்கா நடத்தும் எந்தவொரு எதிர்காலப் பேச்சுவார்த்தையிலும் இந்த இழப்பீட்டுக் கோரிக்கையை உறுதியாக முன்வைக்குமாறு தனது பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.