கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலி

 

நாகாலாந்தில் கடந்த 1990ம் ஆண்டு முதல் மதுவிலக்குச் சட்டம் அமலில் இருந்து வருகின்றது. இந்நிலையில் மோகோக்சங் மாவட்டம் மற்றும் துயன்சாங் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவான விற்பனை நடந்து வருவதாக தெரிகின்றது.

கடந்த இரண்டு நாளில் மட்டும் மோகோக்சங் மாவட்டத்தில் 8 பேரும், துயன்சாங் மாவட்டத்தில் 11 பேரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர்.