மகன் வயது 19-காவல்துறைஅப்பாக்கு தந்த தண்டனை..

 

வயது 19 தான்.. ”அப்பா.. அம்மா.. இவ தான் நான் காதலிக்கிற பொண்ணு.. இப்போ கர்ப்பிணியாக இருக்கிறார். உடனே எங்கள் 2 பேருக்குமு் திருமணம் செய்து வைக்க வேண்டும்” என்று கேட்டதும் அதிர்ந்து தான் போனார்கள் அந்த போலீஸ் தம்பதி. ஆனாலும் ஒரமே மகன்.. செல்ல மகன் தானே என்று வயது 21 ஆகட்டும் திருமணம் செய்து வைக்கிறோம் என காதலியை கரம்பிடிக்க பச்சைக்கொடி காட்டினாலும் ஆத்திரம் அடங்காத அந்த இளைஞர் பெற்ற தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தாயையும் கொல்ல முயன்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. இந்த சம்பவம் நடந்துள்ள இடம் சண்டிகர். சண்டிகரில் உள்ள செக்டார் 22ல் அமைந்து இருக்கும் காவலர் குடியிருப்பில் வசித்து வருபர் நிதின் (வயது 45). இவர் காவல்துறையில் ஏட்டாக இருந்த இவர் சண்டிகரில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி பெயர் மோனிகா. இவர் காவல்துறையில் ஏஎஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரேயொரு மகன் மட்டுமே உள்ளார். அவரது பெயர் ஆர்மன். வயது 19. சிறுவயதில் இருந்தே வீட்டில் ரொம்ப செல்லம். சிறு வயதில் இருந்தே கேட்டதெல்லாம் உடனடியாக கிடைத்துவிடும். 3 பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே தான் சில ஆண்டுகளுக்கு முன்பாக மகன் ஆர்மனின் நடத்தைகள் மாறின. போதைப்பொருளுக்கு அடிமையானார். இதுதவிர இன்னும் சில கெட்ட பழக்கங்களை பின்பற்ற தொடங்கினார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயினர் போலீஸ் தம்பதி நிதின் – மோனிகா. எப்படியாவது மகனை திருத்த வேண்டும். திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்று முயற்சித்தனர். அத்தனை முயற்சிகளும் கைக்கொடுக்கவில்லை. இதனால் மகன் ஆர்மனை நினைத்து கவலையுடன் வாழ்ந்து வந்தனர்.

 

இந்நிலையில் தான் நேற்று அதிகாலையில் வீட்டில் படுத்து இருந்த மோனிகாவை துப்பாக்கியால் ஒருவர் சுட முயன்றார். ஆனால் சுடமுடியாததால் அவரது கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக தப்பிய மோனிகா மொட்டை மாடிக்கு போய் கூச்சலிட்டு உதவி கோரினார். காவல் குடியிருப்பு என்பதால் அருகே வசிக்கும் போலீசார் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.

மோனிகாவின் கணவர் நிதின் தான் படுத்து கிடந்த மெத்தையில் இறந்து கிடந்தார். அவரை யாரோ துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரியவந்தது. இதனால் மோனிகா அதிர்ச்சியில் உறைந்து போனார். மகன் ஆர்மன் தான் தந்தை நிதினை கொன்றுவிட்டு தாய் மோனிகாவை கொல்ல முயன்று இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது நான் கொல்லவில்லை. வீட்டிற்குள் வந்த மர்மநபர் தான் தந்தையை கொன்றவிட்டு தாயை கொல்ல முயன்றதாக கூறினார்.

ஆனால் போலீசார் விடவில்லை. ஆர்மனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனது தந்தை நிதினை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தாய் மோனிகாவையும் கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார். மேலும் இதற்கான காரணத்தையும் அவர் போலீசாரிடம் வாக்குமூலாக அளித்தார். அதனை கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதுபற்றி போலீசார் கூறியதாவது: ”நிதின் – மோனிகா தம்பதிக்கு ஒரே மகனாக ஆர்மன் இருந்தார். இவர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக பஞசுக்குலாவில் உள்ள கதோலி கிராமத்தில் பெண் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. ஆனாலும் அந்த பெண் கர்ப்பமாகினார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை ஆர்மன் தனது பெற்றோரிடம் அழைத்து வந்தார். இருவரும் காதலிக்கிறோம். இவரை தான் திருமணம் செய்ய போகிறேன். புதிதாக தொழில் தொடங்க உள்ளேன். ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக ஆர்மன் மற்றும் அவரது பெற்றோருக்கும் இடையே சண்டைஏற்பட்டது. அதன்பிறகு உறவினர்கள் ஒப்புக்கொண்டதால் அந்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஒப்புக்கொண்டனர். ஆனால் ஆர்மனுக்கு வயது 19 தான் ஆகிறது. இதனால் 21 வயதில் தான் திருமணம் செய்து வைப்போம். அதற்கு முன்பு திருமணம் செய்து வைப்பதுசட்டப்படி குற்றம் என்று கூறினர்.

ஆனால் ஆர்மன் அதனை கேட்கவில்லை. உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தொடர்ந்து பெற்றோரை வலியுறுத்தி வந்த நிலையில் தந்தை நிதினை துப்பாக்கியால் சுட்டு கொன்று தாய் மோனிகாவை கொல்ல முயன்றுள்ளார். இதற்காக ஆர்மன் ஹரித்வாரில் இருந்து நாட்டு துப்பாக்கி, 2 தோட்டாக்களை வாங்கி வந்துள்ளார். ஆர்மனை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர். தற்போது தந்தையை கொலை செய்துள்ள ஆர்மன் மீது விபத்து வழக்கு ஒன்று உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆர்மன் ஓட்டி சென்ற கார் பைக்கில் சென்ற சகோதரர்கள் 2 பேர் மீது மோதியது. இதில் 2 சகோதரர்களும் இறந்தனர். இந்த வழக்கில் ஆர்மன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்த நிலையில் தற்போது தந்தையை கொன்றுள்ளார்.