சிலர் தும்மல் வரும் போது இறைவன் பெயரை எதற்காக சொல்ல வேண்டும்?

 

இறைவனின் நாமத்தை ஒரு நாளைக்கு நாம் எத்தனை முறை சொல்கிறோம் என்று யோசித்து பார்த்தால் அதன் எண்ணிக்கை குறைவு தான். கோவிலுக்கு செல்லும் போதோ அல்லது பூஜை நேரத்தில் மட்டும் தான் சொல்லுவோம். ஆனால் சிலர் தும்மல் வந்தால் கூட இறைவனின் பெயரை சொல்லுவார்கள். இவர்களை பார்த்து மற்றவர்கள் கிண்டல் செய்வது உண்டு. ஆனால் தும்மல் போன்ற மிக சாதாரண சிறிய விஷயத்திற்கு கூட இறைவனின் பெயரை எதற்காக சொல்ல வேண்டும் என பெரியவர்கள் சொல்லுகிறார்கள். வாருங்கள் இதற்கான ஆன்மீக காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.

தும்மல் வரும் போது இறைவனின் பெயரை சொல்வது பலரது வழக்கம். இன்னும் சிலர், “அம்மா, அப்பா” என்றும் சொல்லுவதை பார்த்திக்கிறோம். எதுவும் சொல்லாமல் தும்மினால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சிலர், இறைவனின் பெயரை சொல்லு என்பார்கள். தும்மலுக்கும், இறைவனின் பெயரை சொல்லுவதற்கும் என்ன தொடர்பு? நம்மில் பலரும் யோசித்திருப்போம். ஆனால் இது போன்ற பழக்கத்திற்கு ஆன்மீக மரபில் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அதாவது தும்மல் என்பது அனிச்சையாக நம்மையும் மீறி வரக் கூடிய ஒன்று. அது போன்ற எதிர்பாராத சமயத்தில் கூட உடனடியாக இறைவனின் பெயரை சொல்லிக் கொண்டே இருப்பதால் நம்மையும் அறியாமல் செய்யும் தவறுகள், பாவங்கள் நம்மை விட்டு விலகி விடும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இறைவனை நினைத்து பக்தியுடன் சொன்னாலும், மனதில் பக்தி இல்லாமல் சொன்னாலும் இறைவனின் நாமத்திற்கு சக்தி உள்ளதாகவும், அதற்குரிய பலன் நமக்கு உரிய சமயத்தில் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு இறந்த பிறகு நரகத்திற்கு செல்லும் ஒரு மனிதனின் கதை உதாரணமாக சொல்லப்படுகிறது.