மேஷ ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
மேஷ ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். இணையம் சம்பந்தப்பட்ட தொழில்கள் மேம்படும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விறுவிறுப்பாக வியாபாரம் நடக்கும். லாபம் அதிகரிக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் வந்து சேரும். வெளியூர் பயணங்கள் தொழிலுக்கு தேவையான பலனை கொண்டு வரும். உங்களின் பொறுப்பு அலுவலகத்தில் கூடும். பதவி உயர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பான பலன் அடைவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமை பலம் தரும். இன்று உங்கள் பலவீனம்: கடந்த கால சிந்தனை மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். வேலையில் கவனம் செலுத்த முடியாத மன அழுத்தம் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். 2 புதிய நண்பர்களிடம் குடும்ப விவரங்களை சொல்லக்கூடாது. 3 அந்நிய பெண்களிடம் மிருகம் காட்ட வேண்டாம். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
! ஏற்ற இறக்கமான பலன் வந்து சேரும் நாள். உடன் பிறந்தவர்கள் வழியில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வியாபாரத்தில் நுணுக்கமாக ஈடுபட வேண்டும். வரவுக்கு தகுந்த மாதிரி செலவு செய்ய வேண்டும். அரசாங்க உதவி தாமதமாக வந்து சேரும். பொறாமையால் வேலை இடத்தில் சங்கடம் உண்டாகலாம். பங்கு சந்தைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். வெளியூர் பயணங்கள் சிரமத்தை கொண்டு வரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை பளு கூடும். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய தாமதம் அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிதமான லாபம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். அரசு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்கள் பலவீனம்: எளிதில் முடிய வேண்டிய காரியம் தாமதமாகும். எதிர்கால சிந்தனை குழப்பத்தை தரும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அரசு சார்ந்த பணிகளில் கவனம் தேவை. 2 வாகனங்களில் செல்லும்போது கவனம் சிதறக்கூடாது. 3 வரவு செலவு கணக்கை சரியாக எழுத வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
மிதுன ராசி அன்பர்களே! எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும் நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் தீரும். தொழிலில் புதிய மாற்றம் உருவாகும். பண வரவு தேவைக்கேற்ப வந்து சேரும். வேலை இடத்தில் திறமை பாராட்டப்படும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோகபலன் அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனலாபம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பார்த்த உதவி தடையில்லாமல் வந்து சேரும். இன்று உங்கள் பலவீனம்: எளிதில் முடிய வேண்டிய காரியம் தாமதமாகும். சொத்து பிரச்சனையில் சிக்கல் வரலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் சூதாட்டங்கள் ஆகவே ஆகாது. 2 வேலை இடத்தில் பொறுமையும் பொறுப்பும் வேண்டும். 3 ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து ஜாமீன் போட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! சிறப்பான யோகம் வரும் நாள். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் உண்டாகும். தொழில் எதிர்பாராத லாபத்தை கொண்டு வரும். வியாபாரத்தில் திடீர் வெற்றி உண்டாகும். லாபம் அதிகரித்து கையிருப்பு கூடும். கையில் தாராளமாக பணம் புழங்கும். நினைத்த இடத்தில் வேலை மாறுதல் உண்டாகலாம். ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. அரசாங்க காரியங்கள் தாமதம் இன்றி நடக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வெளியூர் வாய்ப்புகள் ஈடேறும். சுய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: எதிலும் அவசரப்பட்டு செயல்படுவது. வரவுக்கு மீறி செலவு செய்வது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வர்த்தக முதலீடுகளில் கவனம் வேண்டும். 2 இரவு நேர பயணங்களை தள்ளி வைக்க வேண்டும். 3 சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! மேன்மையான காரியங்கள் நடக்கும் நாள் இன்று. எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். அதனால் தன வரவு மேம்படும். நண்பர்களின் உதவி தக்க நேரத்தில் கிடைக்கும். தொழில் விவாதங்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். காப்பீடு மூலமாக பணம் வந்து சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். சுப காரிய நிகழ்ச்சிக்கான ஏற்பாடு நடக்கும். அலுவலகத்தில் சுமூகமான நிலை உண்டாகும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆபரணச் சேர்க்கை அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி பெறுவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசியல் செல்வாக்கு அடைவார்கள். இன்று உங்கள் பலம்: புரிதல்கள் மூலம் நண்பர்களை நெருக்கமாக்குவீர்கள். விவாதங்கள் மூலமாக தொழிலை பலப்படுத்துவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: குழந்தைகள் வழியில் ஏதோ சஞ்சலம் உண்டாகும். கவனமாக வேலை செய்ய முடியாத அளவிற்கு சிந்தனை இருக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பத்திரம் பதிவு செய்யும்போது கவனமாக இருக்கவும். 2 பணம் கொடுக்கும் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். 3 அரசாங்க ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! ஏற்ற இறக்கமான பலன் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் அதிகமான உழைப்பை போட வேண்டும். தொழிலுக்கு ஏற்படும் மறைமுக எதிர்ப்புகளை களைய வேண்டும். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் கவனக்குறைவு வேண்டாம். எதையும் சீர்தூக்கிப் பார்த்து செய்ய வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அவசரப்பட்டு கடன் வாங்க வேண்டாம். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். குலதெய்வ அருளால் நல்லது நடக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழில் நுட்பத்தோடு வியாபாரத்தை நடத்துவது. எதிர்ப்புகளை முறியடிக்கும் மன தைரியம். இன்று உங்கள் பலவீனம்: குடும்ப சூழ்நிலையால் தடுமாற்றம் அடைவது. வேலை இடத்தில் சலசலப்பு ஏற்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 2 இடம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கவனக்குறைவு கூடாது. 3 பணம் கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் கூடாது. அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! விருப்பப்பட்ட காரியங்கள் நடக்கும் நாள். மனதளவில் திருப்தியான சூழல்கள் உருவாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணி புரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு வியாபாரத்திற்கு உதவி செய்யும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கும் நிலை உண்டாகும். வாகன யோகம் சித்திக்கும். தன தானிய லாபம் அதிகரிக்கும்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மைகள் உண்டாகும்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் வந்து சேரும்.
விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும் .
இன்று உங்கள் பலம்:
புதிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் ஏதேனும் தாய் வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.
இன்று உங்கள் பலவீனம்:
கடன் சம்பந்தப்பட்ட விஷயம் மனதை சங்கடப்படுத்தும். ஆரோக்கியத்தில் ஒரு விதமான சோர்வு ஏற்படும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 பணிபுரியும் இடத்தில் கவனச் சிதறல் ஆகாது.
2 மற்றொரு விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
3 சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 6,3
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! தாமதம் ஆனாலும் சிறப்பான பலன் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் சிக்கல்கள் வந்து மறையும். தொழில் துறையில் இருந்த போட்டிகள் விலகும். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் அனுகூலம் உண்டாகும். பதவி உயர்வு தள்ளிப் போகலாம். சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடக்கும் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு தனச்சேர்க்கை ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் வாகன யோகம் கிட்டும். இன்று உங்கள் பலம்: வெளிநாட்டு உதவி உங்களின் நம்பிக்கை அதிகப்படுத்தும். அரசு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: தாய் வழி உறவுகளால் இடையூறு ஏற்படலாம். சுப காரியம் தொடர்பான விரயம் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொழிலாளர்களிடம் கவனமாக நடக்க வேண்டும். 2 பற்று வரவில் தெளிவான சிந்தனை வேண்டும். 3 தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! நன்மைகள் வீடு தேடி வரும் நாள். புதிய முதலீடுகளால் தொழில் மேன்மையடையும். சிறப்பான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார உயர்வு ஏற்படும். கையிருப்பு கூடும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த காரியம் நடக்கும். வேலை இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு உண்டாகும். பூராட நட்சத்திரக்காரர்கள் வேண்டியது நிறைவேறும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: இழுபரியான வாய்ப்புகள் இப்போது நிறைவேறும். தந்தை வழி உறவால் தன வரவு உண்டாகும். இன்று உங்கள் பலவீனம்: நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் குடும்ப இடைவெளியை ஏற்படுத்தும். மறைமுகமான தடைகள் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொழில் சிந்தனைகளின் தீர்க்கமான கவனம் வேண்டும். 2 ஆன்லைன் சூதாட்டங்கள் ஆபத்தை உண்டாக்கும். 3 வரவு செலவு கணக்குகளை சரிபார்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! வெற்றிகரமான காரியங்கள் நடக்கும் நாள். தொழிலில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். வியாபாரம் செழித்து ஓங்கும். பணவரவு அதிகரித்து திக்கு முக்காட வைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை இடத்தில் மதிப்பு கூடும். பணவரவு அதிகரிக்கும். வேலை மாறுதல் ஏற்படலாம். பேச்சு வன்மை காரிய வெற்றியை கொண்டு வரும். புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு செல்வ வளம் பெருகும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு பதவி மாற்றம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும். இன்று உங்கள் பலம்: வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த உதவி வந்து சேரும். அரசியல்வாதி நட்பு பக்கதுணையாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: பூர்வீக சொத்தில் இழுபறிநிலை ஏற்படலாம். எந்த நேரத்திலும் பணி மாறுதல் உத்தரவு வரலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவுக்கு தகுந்த மாதிரி செலவு செய்ய வேண்டும். 2 குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும். 3 வாகனத்தை வேகமாக ஓட்டக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! நல்ல காரியங்கள் நடக்கும் நாள். தொழிலுக்கு மறைமுக எதிர்ப்பு உண்டாகும். அது சாமர்த்தியமாக களையப்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். மந்தமான வியாபாரம் சுறுசுறுப்பாகும். தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம். இருந்தாலும் கட்டுக்குள் இருக்கும். வேலை இடத்தில் தடுமாற்றம் உண்டாகலாம். அக்கறையான நடவடிக்கையில் மேலதிகாரிகளின் அனுதாபம் கிடைக்கும். சுபச் செலவுகள் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு உயர்வான செயல்கள் நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு தன தானிய சேர்க்கை உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: எதிர்ப்புகளின் நடுவே தொழிலை மேம்படுத்தும். திறன் எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம். இன்று உங்கள் பலவீனம்: உறவினர்களின் புரிந்து கொள்ளாத நிலையால் மனவருத்தம் ஏற்படுவது. குடும்பத்தில் ஏற்படும் சலசலப்பு. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிரக்கூடாது. 2 தொழில் ரகசியங்களை பகிரங்கப்படுத்துதல் ஆகாது. 3 அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்
மீன ராசி அன்பர்களே! உயர்வான காரியங்கள் நடக்கும் நாள். நீங்கள் திட்டம் போட்ட செயல் தடையில்லாமல் நடக்கும். வியாபாரத்தில் ஏற்படுத்திய நுட்பங்கள் பலன் கொடுக்கும். லாபம் அதிகரிக்கும். உங்கள் பேச்சு செல்வாக்கை கொண்டு வரும். அரசியல் வட்டாரத்தில் பழக்கம் ஏற்படும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யப்படும். எதிர்ப்புகள் மறைந்து போகும். பதவி உயர்வு கிடைக்கலாம். விருப்பப்பட்ட வேலை மாறுதல் உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு விரும்பிய செயல்கள் நடக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தேவையான வருமானம் அதிகரிக்கும்.
ரேவதி நட்சத்திரக்காரர்கள் வெளிநாட்டு வாய்ப்பு கைகூடும்.
இன்று உங்கள் பலம்:
எதிர்பார்த்த அரசாங்க உதவி வந்து சேரும். வெளிநாட்டு நண்பரின் ஆதரவு பலத்தை கொடுக்கும்.
இன்று உங்கள் பலவீனம்:
அலைச்சல் காரணமாக மனச்சோர்வு உண்டாகும். அரசாங்க காரியம் சற்று தாமதமாகும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 வங்கி வரவு செலவு சரியாக கையாளப்பட வேண்டும்
2 நெருங்கிய உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
3 குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 8,5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்.
வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.



