திருமண பொருத்தம் பார்க்க தொடங்கும் போது முதலில் மணமகன் மற்றும் மணமகள் ஜாதகத்தை விரிவாக ஆராய்வதன் மூலம், அவர்களுடைய வாழ்க்கையில் அடிப்படையான இணக்குதன்மை புரிந்து கொள்ள உதவுகிறது.மேலும் அடிப்படையாக கூறும் பதில்களின் மதிப்பீடுகளையும் ஆராய்வது அவசியம்.இது அந்த தம்பதிகளின் திருமண வாழ்க்கையில் முக்கியமான விஷயம் என்பது தான் கவனமாக ஆராய்வது அவசியம்.
திருமண பொருத்தத்தை பார்க்கும் திருமணம் செய்து கொள்ள இருக்கும் அந்த ஆண் மற்றும் மண்ணின் ஜாதகத்தை ஆராய்ந்து அதில் உள்ள கிரக நிலைகள், பாவங்கள் மற்றும் தசா புத்தி உள்ளிட்ட அனைத்தையும் கவனமாக மறைவது மூலம் தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என தீர்மானிக்கின்றன.
திருமணத்திற்கான 10 பொருத்தங்கள்
பொதுவாக கூறப்படும் பத்து பொருத்தங்கள் மட்டும் போதாது, அவர்களுடைய ஜாதகத்தை முழுவதுமாக ஆய்வதும், கிரக அமைப்புகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் சரியான இணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். பொதுவாக, பத்து பொருத்தங்கள் மட்டும் போதாது; ஜாதக அமைப்புகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரியான இணக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எனவே திருமணத்திற்கு முன்னால் திருமண பொருத்தத்தை பார்ப்பது முதன்மையான விஷயமாக கருத வேண்டும். இனி பத்து பொருத்தங்களை பார்ப்போம்.
தினப்பொருத்தம்
தம்பதியர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை கணிக்கிறது.
இது தம்பதியர் நலனுக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
கண பொருத்தம்
தம்பதியிலேயே இருக்கக்கூடிய மனநிலையை பொருத்தம் மற்றும் குடும்பத்தில் அமைதியை குறிக்கும்.
மகேந்திர பொருத்தம்
உங்களுக்கு கிடைக்கக்கூடிய தந்தை பெயர் அதாவது சந்ததி பாக்கியத்திற்கும் வளத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஸ்திர பொருத்தம்
தம்பதியருக்கு நீண்ட ஆயுள் மற்றும் செழிப்பு ஆகியவற்றை குறிக்கக்கூடியன.
யோனி பொருத்தம்
கணவன் மனைவி இடையே இருக்கும் உடல் மற்றும் மன ரீதியான ஒற்றுமை தரும்.
தம்பதியினரின் ராசி சேர்க்கை நல்ல உறவினை உருவாக்கும்.
ராசிஅதிபதி பொருத்தம்
அவர்களின் ராசி அதிபதிகளின் பொருத்தம் இருப்பின் நல்ல அதிர்ஷ்டம் தரும்.
வசிய பொருத்தம்
தம்பதியிடையே ஒருவரை ஒருவர் ஈர்க்கும் தன்மையை குறிக்கிறது.
ரஜ்ஜு பொருத்தம்
மாங்கல்ய பாக்யத்தை, வாழ்க்கை நலனை குறிக்கக்கூடிய பொருத்தம்.
வேத பொருத்தம் சுப நிகழ்வுகளுக்கான நல்ல முடிவுகளை தரும்.
ராசி மற்றும் நட்சத்திரம் பொருத்தம் பார்ப்பது தமிழ் ஜோதிடத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது அந்த தம்பதியரின் மன நிலை மற்றும் குண நலன்களை வெளிப்படுத்தக் கூடியதாக அமைகிறது
சரியான ராசி நட்சத்திர பொருத்தம் இருப்பின் தம்பதியினரின் வாழ்க்கையில் இணக்கமான சூழலும், இல்லை எனில் தேவையற்ற சிக்கலும் தோன்ற வாய்ப்பு உண்டு.
குடும்ப செழிப்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம் உள்ளிட்டவற்றை பார்க்கும் விதமாக ராசி பொருத்தம் பார்க்கப்படுகிறது.
ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பு திருமணம் செய்து கொள்ளக்கூடிய தம்பதிகளின் வாழ்க்கை மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக ஜோதிடத்தில் அசுப கிரகங்கள் என கருதப்படும் சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய கிரகங்கள் தவறான இடங்களில் இருந்தால், அவர்களுடைய திருமண வாழ்க்கையை பெரிய சவாலாக அமைந்து விடும்.
அதே சமயம், ஜாதகத்தில் சுப கிரக அமைப்பு இருப்பின், அவர்களுக்கு பொருத்தம் குறைந்தாலும் வாழ்க்கை சீராகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.கிரக நிலைகளை ஆராய்ந்து திருமண பொருத்தத்தை கணிப்பது அவசியம்.
திருமண வாழ்க்கையில் தம்பதியினர் நீண்ட காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மேலும் கணவனுடன் சேர்ந்து மனைவி நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்பதற்கான குறியீடாக இதை குறிப்பிடுகின்றனர்.
ஒரு தம்பதியினருக்கு மாங்கல்யம் பலம் சிறப்பாக இருந்த நபர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும், திருமண அமைதி, சந்தோஷம் நிறைந்திருக்கும். இல்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்சனை குறைபாடுகளும் தோன்றும் வாய்ப்புகள் உண்டு.
பெண்களின் ஜாதகத்தில் சந்திரன், குரு மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் அவருடைய மாங்கல்ய பலம் மிகவும் பலமாக இருக்கும். அதுவே கணவன் மனைவி வாழ்க்கையில் மிக உறுதுணையாக கருதப்படுகிறது.
மாங்கல்ய பலம் குறைவாக இருப்பின் சில பரிகாரங்களை செய்த பின்னரே திருமணம் செய்வது நல்லது. இதனால் நீடித்த செழிப்புடன் திருமண வாழ்க்கை அமைய சாத்தியமாகும்.
திருமண வாழ்க்கையை பாதிக்கும் தோஷங்கள்
ராகு கேது தோஷம்
ஒருவருடைய ஜாதகத்தில் ராகம் மற்றும் கேது கிரகங்கள் 1, 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் முறையற்ற வகையில் அமைந்திருப்பின் ராகு கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் உண்டாகிறது. இந்த தூரம் இருந்தால் திருமண தாமதம், உடல் ஆரோக்கிய பிரச்சனை, குடும்பத்தில் மனக்குழப்பம் உள்ளிட்டவை ஏற்படும்.
அதிலும் குறிப்பாக 1,7,2,8ம் இடங்களின் சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். இந்த தோஷம் கொண்ட ஜாதகம், அதே தோஷம் கொண்ட மற்றொரு ஜாதகத்துடன் இணைந்தால் தான் தோஷ நிவர்த்தியாகும்.
5ல் சார்ப தோஷம் உள்ள ஜாதகத்தினர், 5 மற்றும் 11-ல் சர்ப்பங்கள் இல்லாத ஜாதகத்தினருடன் இணைத்தல் சிறந்ததாக கருதப்படுகிறது.
நல்லெண்ணெய் தீபம்
இவர்களுக்கு திருமண தோஷம் நீங்க ராகு காலத்தில் துர்க்கை அம்மன் அல்லது காளியம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
தானம் செய்தல்
ஏழைகளுக்கு போர்வை அல்லது கடுகு எண்ணெய் தானமாக கொடுக்கலாம்.
பரிகார ஸ்தலம்
ஸ்ரீ காளஹஸ்தி திருக்கோயில் சென்று ராகு கேது பரிகாரம் பூஜை செய்து வருவது சிறப்பாக தீர்வாக நம்பப்படுகிறது.
தசா புத்தி
திருமண பொருத்தத்தின் போது, நிபுணர்கள், ஜாதகத்தினரின் தசா மற்றும் புத்தி, கர்ம பலன்களை கருத்தில் கொண்டு முடிவுகளை கொடுப்பது நல்லது.
இதனால் தம்பதியினரின் வாழ்க்கை அமைதியான வாழ்க்கை வாழ வழி வகுக்கும்.
எனவே திருமண முடிவு எடுக்கும் முன் நிபுணர் ஆலோசனையை தவறாமல் பெறுவது அவசியமாகும்.



