இலங்கையில் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த 24 இணையவழி சூதாட்ட மற்றும் பந்தய இணையத்தளங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்குவதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை தொடர்பான விவரங்கள் வருமாறு:
தடைக்கான பின்னணி
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபையினால் 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின் கீழ்* செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் இலங்கைக்குள் இணையவழி சூதாட்ட சேவைகளை நடத்துவதும் அல்லது அதனைப் விளம்பரப்படுத்துவதும் இச்சட்டத்தின் 44 ஆம் பிரிவின் படி* தண்டனைக்குரிய குற்றமும் சட்டவிரோதச் செயலுமாகும்.
இதனடிப்படையில், குறிப்பிட்ட சட்டவிரோத இணையத்தளங்களை இலங்கைக்குள் இருந்து அணுகுவதைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள 24 இணையத்தளங்கள்
1. *1xbet.com*
2. **betway.com/en-lk**
3. *22bet.com*
4. *melbet.com*
5. *unibet.com*
6. *betfair.com*
7. *dafabet.com*
8. *bet365.com*
9. *1win.com*
10. *spinbetter.com*
11. *10cric.com*
12. *bc.game*
13. *megapari.com*
14. *pin-up.bet*
15. *stake.com*
16. *mostbet.com*
17. *parimatch.com*
18. *betwinner.com*
19. *linebet.com*
20. *4rabet.com*
21. *rajabets.com*
22. *dbbet.com*
23. *coldbet.com*
24. *WinWin*
இலங்கையின் சட்டக் கட்டமைப்புக்கு முரணாக இயங்கும் இத்தகைய அங்கீகரிக்கப்படாத இணையவழி சூதாட்டத் தளங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், அவற்றில் பணத்தை முதலீடு செய்வதிலிருந்தும் முற்றாக விலகியிருக்குமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணைக்குழு ஆகியன பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.



