நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
சிவாஜி கணேசன் – கமலா அம்மாள் தம்பதிக்கு சாந்தி, தேன்மொழி என்கிற இரண்டு மகள்களும், ராம்குமார், பிரபு என்கிற இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களில் சாந்திதான் மூத்தவர். அவர் முதல் குழந்தை என்பதால் சிவாஜி கணேசனுக்கு அவர் மீது அளந்த அளவு கடந்த பாசம் உண்டு என திரையுலர்கள் சொல்வதுண்டு. அதனால்தான் சென்னை அண்ணாசாலையில் சிவாஜி கணேசன் கட்டிய தியேட்டருக்கு சாந்தி என்கிற பெயரை வைத்தார்..
கடந்த சில வருடங்களாக சாந்தி நாராயணசாமி நடிகர் திலகம் சிவாஜி தொடக்க காலத்தில் வாழ்ந்து வந்த பூர்வீக வீட்டில் வசித்து வந்தார். கடந்து சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று காலை அவர் காலமாகிவிட்டார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.



