எம்மில் சிலருக்கு சிறுநீரில் குருதி கலந்து வெளியேறினால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும்.News
அதிலும் குறிப்பாக சிக்கலான பகுதியில் சிறுநீரக கற்கள் உண்டாகி, அவை வெளியேற முடியாத நிலையில் இருக்கக்கூடும். இத்தகைய பாதிப்பிற்கு பெர்குட்டேனியஸ் நெஃப்ரோலிதோடோமி எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் சிலருக்கு சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதற்கான மருந்தியல் சிகிச்சைகளை பெற்றிருப்பார்கள். ஆனால் இத்தகைய சிகிச்சையின் காரணமாக அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைத்திருக்காது.
இத்தகைய தருணத்தில் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையின் மேல் பகுதியில் இயல்பான அளவைவிட பெரிய அளவிலான சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அத்தகைய கற்கள் தானாக வெளியேற இயலாத அளவிற்கு இருந்தாலும், சிக்கலான நிலையில் இருந்தாலும், அத்தகைய கற்களை அகற்றுவதற்கு வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, அவர்களுக்கு பெர்குடேனியஸ் நெஃப்ரோலிதோடோமி எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் இதற்கு நிவாரணம் வழங்குகிறார்கள்.
இத்தகைய சத்திர சிகிச்சையின் போது முதுகு பக்கத்தில் சிறிய அளவிலான துளையை ஏற்படுத்தி, அதனூடாக கருவிகளை உள்ளே செலுத்தி, சிறுநீரக கற்களை உடைத்து, அதனை பிரத்யேக கருவிகள் மூலம் வெளியேற்றி, இதற்கு நிவாரணம் வழங்குவார்கள். இத்தகைய சத்திர சிகிச்சை தோராயமாக நான்கு மணித்தியாலங்கள் வரை நடைபெறும்.
இத்தகைய சத்திர சிகிச்சையின் போது இரண்டு செ.மீற்றருக்கும் மேல் உள்ள சிறுநீரக கற்களையும், ஒழுங்கற்ற வடிவமைப்பில் உள்ள கற்களையும் அகற்ற இயலும். இத்தகைய சத்திர சிகிச்சை பிறகு இரண்டு வாரங்கள் வரை வைத்தியர்களின் அவதானிப்பின் இருக்க வேண்டியதிருக்கும்.
இதனைத் தொடர்ந்து உங்களுக்கு சிறுநீரக கற்கள் முழுமையாக அகற்றப்பட்டு நிவாரணம் வழங்கப்படும். அதை தருணத்தில் இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் இத்தகைய சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்படாத அளவிற்கு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை முழுவதுமாக கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும்



