ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டாக கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வான்வெளி தாக்குதல் நடத்தியது .இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளை குறி வைத்து ஈரான் தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஹர்முஸ் ஜல சந்தியை ஈரான் மூடியதால் உலக நாடுகள் அளவில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் சர்வதேச நாடுகள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.
இஸ்ரேல் -ஈரான் இடையே தொடரும் போர்
பின்னர் இஸ்ரேல் -ஈரான் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது. பிறகு ஜல சந்தியை திறந்த ஈரான் சரக்கு கப்பல்களை செல்ல அனுமதித்தது. இந்த சூழலில் கடந்த 12ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்து உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கியது.
தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி வரை ஈரான் மீது அமெரிக்கா 13 நாட்களாக தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இந்த சூழலில் 24ஆம் தேதி முதல் எந்த தாக்குதலையும் இரு நாடுகளும் நடத்தவில்லை .தொடர்ந்து அமைதி நிலை காணப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவும் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் சந்தித்து பேசி உள்ளனர். இது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
டிரம்ப் – நெதன்யாகு திடீர் சந்திப்பு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரானுடன் போர் தொடங்கியதற்குப் பிறகு, இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.இந்த சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனையில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரான் மீதான போர் நடவடிக்கை குறித்தும், ஈரானிடம் அணுஆயுதங்கள் சென்று சேராமல் தடுப்பது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.
90 நிமிட வெள்ளை மாளிகை ஆலோசனை
இந்த சந்திப்பிற்கு பிறகு வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்க அதிபருடன் நான் இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளிலேயே இது மிகச் சிறந்த ஒன்று. ஈரானிடம் அணுஆயுதம் சேரக் கூடாது என்ற இரு நாடுகளின் பொதுவான இலக்கு குறித்து நாங்கள் தீவிரமாக விவாதித்தோம் என்று கூறினார்.இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக போர்ச் சூழல் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள மனிதநேய நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அதேபோல், சமீபத்தில் ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்த போர்நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
ஈரானுக்குப் புகட்டப்போகும் பாடம் என்ன?
கடந்த ஏப்ரல் மாதத்தில் பேச்சுவார்த்தையின் போது ட்ரம்புக்கும் நெதன்யாகுவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உச்சத்தை எட்டின. இதனால் இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரமாக குற்றம்ச்சாட்டிக் கொண்டனர். இந் த நிலையில் வாஷிங்டன் பயணத்தின் போது, மறைந்த அமெரிக்க செனட்டர் லின்ட்சே கிரகாமின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளிலும் நெதன்யாகு கலந்துகொண்டார். அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே எந்தவித பெரிய பிளவோ அல்லது விரிசலோ இல்லை என்பதை ஈரான் போன்ற நாடுகளுக்கும் உணர்த்துவதே இந்த திடீர் சந்திப்பின் முக்கிய நோக்கம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் .



