S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை ! ரஷ்யா இந்தியாவுக்கு கொடுக்கும் ஆயுதம்..

 

நவம்பர் மாதம் இந்தியாவுக்கு S-400 ரக வான் பாதுகாப்பு அம்சத்தை ரஷ்யா நமக்கு கொடுக்கிறது. ரஷ்யா கொடுக்கும் 5வது S-400 இது. நமக்கு பக்கத்தில் சீனாவும், பாகிஸ்தானும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் இந்த நேரத்தில், தற்போது ரஷ்யா கொடுக்க இருக்கும் S-400 ஆயுதம், நம்முடைய வான் பாதுகாப்பை பல மடங்கு உயர்த்தும்.

இந்தியா-ரஷ்யா இடையே மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் 5வது மற்றும் கடைசி S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வரும் நவம்பர் மாதம் ரஷ்யா நம்மிடம் ஒப்படைக்கிறது.

இந்திய வான் எல்லைகளை பாதுகாப்பதற்காக ரூ.45,000 கோடி மதிப்பில் 5 ஸ்குவாட்ரான் S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கு இரு நாடுகளுக்கும் இடையே 2018ம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி முதல் மூன்று S-400 ஏவுகணை அமைப்புகள் கடந்த 2021-2023 வரை இந்தியாவிடம் வெற்றிகரமாக ஒப்படைக்கப்பட்டன. இவை நாட்டின் முக்கிய எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

மொத்தம் 5 S-400 வர வேண்டும். 3 சரியா நேரத்தில் வந்த நிலையில்.. 2 பெண்டிங்கில் இருந்தது. உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சூழல்களால் இந்த விநியோகத்தில் சற்று தாமதம் ஏற்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது 5வது மற்றும் இறுதி ஏவுகணை அமைப்பு இந்த நவம்பர் மாதம் நம்மிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட இருக்கிறது. இது தவிர மேலும் 5 கூடுதலான S-400 ஏவுகணை அமைப்புகளை வழங்கவும் ரஷ்யா முன் வந்திருக்கிறது. இருப்பினும் இதற்கான விலை, அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர ஆகும் செலவு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டுதான் இந்தியா முடிவு எடுக்கும்.

இந்தியாவை பொறுத்தவரை S-400 என்பது முக்கியமான ஆயுதம். எதிரி நாடுகளின் போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுமார் 400 கி.மீ தூரத்திற்கு முன்னரே இந்த S-400 அமைப்பின் ரேடார் கணித்துவிடும். ஒரே நேரத்தில் பல இலக்குகளை வான்வழியிலேயே தாக்கி அழிக்கும் உலகின் மிகச்சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாக இது இருக்கிறது.

பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கு சீனா அதிக அளவில் உதவி செய்து வருகிறது. குறிப்பாக ராணுவ விஷயத்தில் பாகிஸ்தானுக்கு சப்ளையரே சீனாதான். இப்படி இருக்கையில், நமக்கும் நம்பகமான ஆள் தேவைப்படுகிறது. அதுதான் ரஷ்யா. இந்த S-400 ஆயுதம் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பெரிய அளவுக்கு உதவும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் ரஷ்யா மாதிரி ஒரு நண்பன் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.