தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார். கடந்த 5ம் தேதி சிவகாசியில் நடந்த சன் டிவி சிறப்பு பட்டிமன்றத்தில் நடுவராக பொறுப்பேற்று நடத்தினார். 2 நாட்களாக காய்ச்சல் காரணமாக ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று காலை சாலமன் பாப்பையா உயிர் பிரிந்தது. வயது மூப்பு காரணமாக சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார்; அவருக்கு வயது 90; 12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியவர் சாலமன் பாப்பையா.
கலகலப்பாக பட்டிமன்றங்களை நடத்துவதில் புகழ்பெற்றவர் சாலமன் பாப்பையா. அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களோ, இனிய குழந்தைகளே என்றொலிக்கும் கணீர்க் குரலுக்கு சொந்தக்காரர். புராணங்கள், இலக்கியங்களை பேசிக்கொண்டிருந்த பட்டிமன்றங்களில் எளிய மக்களின் வாழ்க்கையை பேச வைத்தவர். 2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்



