ஈரானை தாக்கப்போகும் மிகப்பெரிய அணுசக்தியற்ற குண்டு

 

ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் திட்டங்களைத் தயாரித்துள்ளதாக சி.என்.என்.cnn செய்தியை கோடிட்டு ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டால், “அனைத்து வெடிகுண்டுகளின் தாய்” என்று அழைக்கப்படும் GBU-43/B மாபெரும் வெடிகுண்டு  பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் முக்கிய எரிசக்தி நிலையங்கள் மற்றும் அணுசக்தி தளங்களை குறிவைத்து இந்த அவசரகால இராணுவத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன அமெரிக்க ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகப்பெரிய அணுசக்தியற்ற குண்டு இதுவாகும்.

இதன் சாத்தியமான பயன்பாடு பிராந்தியத்தில் மோதல்களை ஒரு பெரிய கட்டத்திற்கு உயர்த்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எனினும், மிக ஆழமாகப் புதைக்கப்பட்ட அல்லது பலத்த பாதுகாப்பைக் கொண்ட நிலத்தடி அணுசக்தி நிலையங்களுக்கு எதிராக இந்த வெடிகுண்டு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் அமெரிக்க இராணுவ அதிகாரிகளிடையே கேள்விகளும் சந்தேகங்களும் நிலவுகின்றன.