வான்வழித் தாக்குதலில்,”ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

 

காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் சிறப்புப் படை தளபதி முஹம்மது மஹ்மூத் மர்ஷாத் அல்-காதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. கான் யூனிஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான முஹம்மது மஹ்மூத் மர்ஷாத் அல்-காதி,

ஹமாஸின் நுக்பா சிறப்புப் படையின் கம்பெனி கமாண்டராகச் செயல்பட்டு வந்தவர். 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சுஃபா ராணுவ முகாம் மீதான ஊடுருவலில் இவர் நேரடியாகப் பங்கேற்றதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.