வயிற்றில் திடீரெனத் தோன்றும் அதீத வலி… சாப்பிட்ட பிறகு ஏற்படும் அசௌகரியம்… குமட்டல், வாந்தி… இவை அனைத்தும் சாதாரண செரிமானப் பிரச்னைகள் என்று கடந்து சென்றுவிட முடியாது. சில நேரங்களில் இதற்குக் காரணமாக பித்தப்பையில் உருவாகும் கற்களாக இருக்கலாம். பித்தப்பை கற்கள் இருப்பது தெரியவந்தவுடன், “அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. ஆனால் அறுவை சிகிச்சைதான் ஒரேவழி என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் மாற்று மருத்துவமான ஹோமியோபதி .
பித்தப்பை என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரைச் சேமித்து வைக்கும் சிறிய உறுப்பு. பித்தநீரில் உள்ள கொழுப்பு, பிலிரூபின் உள்ளிட்ட பொருட்களின் சமநிலையில் மாற்றம் ஏற்படும்போது, அவை படிந்து நாளடைவில் கற்களாக உருவாகலாம். சிலருக்கு ஒரு கல் மட்டும் இருக்கலாம்; சிலருக்கு பல கற்கள் இருக்கலாம். கற்களின் அளவும் மாறுபடும்.
சிலருக்கு கற்கள் இருந்தாலும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். மற்றவர்களுக்கு வயிற்றுவலி, செரிமானக் கோளாறு, குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடல் பருமன், மிக வேகமாக உடல் எடையைக் குறைத்தல், நீரிழிவு, சில metabolic மாற்றங்கள், குடும்பப் பின்னணி மற்றும் ஹார்மோன் தொடர்பான காரணிகள் போன்றவை பித்தப்பைகற்கள்சேவை பார்
உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
பித்தப்பைகற்கள் ஏற்படும் அபாயம் யாருக்கு அதிகம்?
உடல் பருமன் உள்ளவர்கள், உடல் எடையை மிக வேகமாகக் குறைப்பவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், குடும்பத்தில் பித்தப்பை கற்கள் இருந்தவர்கள் மற்றும் சில metabolic பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அபாயம் அதிகமாக இருக்கலாம். பெண்களுக்கும் சில ஹார்மோன் காரணங்களால் பித்தப்பை கல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். கர்ப்ப காலத்திலும் சிலருக்கு இந்த அபாயம் அதிகரிக்கலாம். அதேபோல், அதிகமாக processed food, refined carbohydrates மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை போன்றவையும் உடலின் metabolic balance-ஐ பாதிக்கக்கூடும்.
பித்தப்பைகற்களை ஹோமியோபதி மருந்துகள் மூலம் கரைக்க முடியுமா? அது சாத்தியமா?உடற்கூறியல் பயில்
பித்தப்பைகற்கள் இருப்பது தெரிந்தவுடன் “அறுவை சிகிச்சைதான் ஒரே வழி” என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஹோமியோபதியில் பித்தப்பைகற்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, கல்லின் இருப்பை மட்டும் பார்த்து ஒரு குறிப்பிட்ட மருந்தை வழங்குவதில்லை. நோயாளியின் முழுமையான அறிகுறிகள், வலியின் தன்மை, வலி ஏற்படும் நேரம், உணவுடன் உள்ள தொடர்பு, குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம், செரிமானப் பிரச்சினைகள், அடி வயிற்றின் நிலை மற்றும் உடல் முழுவதையும் பாதிக்கும் பொதுவான அறிகுறிகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து மருந்து தேர்வு செய்யப்படுகிறது.
சில நோயாளிகளில் சிகிச்சையின் நோக்கம் அறிகுறிகளை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலின் இயல்பான செயல்பாடுகளைச் சீர்படுத்தி, கல் தொடர்பான பிரச்னையைத் தொடர்ந்து கண்காணிப்பதாகவும் இருக்கும். “இந்த ஒரு மருந்தை எடுத்தால் எந்த வகையான கல்லும் நிச்சயம் கரைந்துவிடும்” என்று கூறுவது ஹோமியோபதியின் தனி நபருக்கான அணுகுமுறை அல்ல. சிகிச்சையின் முன்னேற்றத்தை அறிகுறிகள் மட்டுமின்றி, தேவையானபோது அல்ட்ரா சவுண்ட் போன்ற பரிசோதனைகள் மூலமாகவும் கண்காணிப்பது முக்கியம்.தையல் சேவை
கற்களின் அளவு, எண்ணிக்கை மற்றும் இருப்பிடம் சிகிச்சை முறையை மாற்றுமா?
ஆம். மிகவும் முக்கியமானது. ஒரு சிறிய கல், பெரிய கல், பல கற்கள், பித்தப்பையின் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் கல் அல்லது bile duct-ல் இருக்கும் கல் – இவை அனைத்தையும் ஒரே மாதிரியாக அணுக முடியாது. அதனால் அல்ட்ரா சவுண்ட் ரிப்போர்ட்டில்:
*கற்களின் எண்ணிக்கை
*மிகப்பெரிய கல்லின் அளவு
*கற்கள் இருக்கும் இடம்
*பித்தப்பையின் நிலை
*bile duct-ன் நிலைடாக்டரை தேடு
ஆகியவற்றைப் பார்ப்பது முக்கியம். இதனுடன் நோயாளியின் அறிகுறிகளையும் இணைத்துப் பார்த்துத்தான் சிகிச்சை அணுகுமுறை தீர்மானிக்கப்படுகிறது.எந்த வகையான பித்தப்பை கற்களுக்கு ஹோமியோபதி சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்?
ஹோமியோபதியில் கல்லின் வகை அல்லது அளவை மட்டும் வைத்து மருந்து தேர்வு செய்வதில்லை.உதாரணமாக, ஒரே அளவிலான gallstone இரண்டு நோயாளிகளுக்கு இருந்தாலும், ஒருவருக்கு கொழுப்பு உணவுக்குப் பிறகு வலி இருக்கலாம்; மற்றொருவருக்கு குமட்டல், வயிறு உப்புசம் அல்லது அசிடிட்டி முக்கிய அறிகுறியாக இருக்கலாம். அதனால் இருவருக்கும் ஒரே prescription மருந்துகள் தேவையில்லை. ஹோமியோபதியில் Chionanthus, Chelidonium, Fel tauri, Hydrastis போன்ற பல கல்லீரல் மற்றும் பித்தநீர் பாதை தொடர்பான மற்றும் செரிமான அறிகுறிகளின் படங்கள் அடிப்படையில் பரிசீலிக்கப்படுகின்றன.மருந்து ஆர்டர்செய்
ஆனால் தீர்வு என்பது நோயாளியின் முழுமையான அறிகுறி படங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இந்த மருந்துகளின் பெயர்கள் சிகிச்சைக்கான பொதுவான பரிந்துரையாக அல்ல. நோயாளியின் அறிகுறிகளுக்கு ஏற்ப தகுதியான மருத்துவர் மட்டுமே மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
ஹோமியோபதி சிகிச்சையில் கற்களின் அளவு குறைகிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?
இதற்கு இரண்டு வகையான தொடர் கண்காணிப்பு முக்கியம். முதலில், நோயாளியின் அறிகுறியில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். வயிற்றுவலி குறைகிறதா, உணவுக்குப் பிறகு ஏற்படும் அசெளகரியம் குறைகிறதா, குமட்டல் அல்லது வயிறு உப்புசம் குறைகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால் கல் உண்மையில் அளவில் குறைந்திருக்கிறதா என்பதை அறிய imaging follow-up முக்கியம். ஆரம்ப அல்ட்ரா சவுண்ட்-ஐ சிகிச்சைக்குப் பிந்தைய அல்ட்ரா சவுண்ட் உடன் ஒப்பிடலாம். மேலும், கற்களின் அளவு அல்லது எண்ணிக்கையின் ஒப்பீடு என்ற முறையில் கண்காணிக்கலாம். இதனால் நோயாளியின் முன்னேற்றத்தை மட்டுமல்லாமல், ஸ்கேனில் காணப்படும் மாற்றங்களையும் மதிப்பீடு செய்ய முடியும்.ஆலோசனையைப் பெறு
பித்த நாளத்தில் கல் சிக்கியிருந்தால் ஹோமியோபதி மட்டும் போதுமா?
பித்தநாளத்தில் கல் சிக்கியிருப்பது கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டியநிலை. கல் bile flow-ஐத் தடுக்கும்போது மஞ்சள் காமாலை, தொற்று அல்லது கணைய அழற்சி போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.அதனால் இப்படிப்பட்ட நிலையில் முதலில் நோயாளியின் நோயாளியின் மருத்துவ நிலையை மதிப்பீடு செய்து, ஏதேனும் அடைப்பு அல்லது சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிதல். வேண்டும்.
தேவையான சூழ்நிலையில் குடலியல் நிபுணரை அணுகி மதிப்பீடும் பெறப்பட வேண்டும். சில நோயாளிகளில் ERCP போன்ற endoscopic intervention மூலம் bile duct-ல் சிக்கியுள்ள கல்லை அகற்ற முடியும்.நோயாளியின் பாதுகாப்பே முதன்மை. எந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினாலும், பிரச்னை உள்ள சூழ்நிலையில் தேவையான மருத்துவ சிகிச்சையை தாமதிக்கக் கூடாது. கடுமையான வயிற்றுவலி, காய்ச்சல் அல்லது மஞ்சள் காமாலை ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?உடற்கூறியல் பயில்
இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. குறிப்பாக கடுமையான அல்லது தொடர்ந்து அதிகரிக்கும் வயிற்றுவலி, காய்ச்சல் மற்றும் நடுக்கம், தொடர்ந்து வாந்தி, கண்கள் அல்லது தோல் மஞ்சள் நிறமாக மாறுதல், சிறுநீர் அடர் நிறம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ மதிப்பீடு பெற வேண்டும். இவை பித்தப்பை அழற்சி, பித்தநீர் குழாய் அடைப்பு அல்லது தொற்று போன்ற சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு வீட்டிலேயே மருந்து எடுத்துக்கொண்டு பார்க்கலாம் என்று தாமதிப்பது சரியான அணுகுமுறை அல்ல. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பித்தப்பையை அகற்றும் அறுவை சிகிச்சையை ஓமியோபதி சிகிச்சையில் தவிர்க்க முடியுமா?
ஒவ்வொரு நோயாளியின் நிலையும் வேறுபட்டது. எனவே இதற்கு எல்லோருக்கும் ஒரே பதில் கிடையாது. கல் இருப்பது மட்டும் அறுவை சிகிச்சைக்கான காரணமாக இருக்காது. நோயாளிக்கு அறிகுறிகள் உள்ளனவா, கற்களின் அளவு மற்றும் இருப்பிடம் என்ன, மீண்டும் மீண்டும் வலி ஏற்படுகிறதா, பித்தைப்பையில் அழற்சி இருக்கிறதா, பித்த நீர்க்குழாயில் பாதிப்பு உள்ளதா போன்ற பல காரணிகளைப் பார்க்க வேண்டும்.சில நோயாளிகளுக்கு கண்காணிப்பு மற்றும் அறுவைசிகிச்சை இல்லாத நிலை போதுமானதாக இருக்கலாம்.டாக்டரை தேடு
மற்றவர்களுக்கு பிரச்னை அல்லது குறிப்பிட்ட மருத்துவ அறிகுறிகள் காரணமாக அறுவை சிகிச்சை தலையீடு தேவைப்படலாம்.எனவே, பித்தப்பை கல் என்றாலே அறுவை சிகிச்சைதான் என்பதும் சரியான அணுகுமுறை அல்ல; அதே நேரத்தில் அறுவைசிகிச்சை ஒருபோதும் தேவையில்லை” என்றும் கூற முடியாது.ஆரம்பத்திலேயே சரியான மதிப்பீடு செய்து, நோயாளிக்கு ஏற்ற சிகிச்சை முறையைத் தேர்வு செய்வதே முக்கியம்.
பித்தப்பை கற்கள் வராமல் தடுக்கும் வழிகள் என்ன?
அனைத்து பித்தப்பை கற்களும் முழுமையாகத் தடுக்க முடியாது. ஆனால் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் அபாயத்தைக் குறைக்க உதவும்.
உணவு: நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழுத்தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பது அதிக சர்க்கரை மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றைக் குறைப்பது நல்லது.செரிமானம் மேம்படுத்து
உடல் எடை அதிகமாக இருந்தால் படிப்படியாகக் குறைக்க வேண்டும். அதற்காக பட்டினி கிடத்தல் அல்லது மிக வேகமாக உடல் எடையைக் குறைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி: தினசரி அல்லது வாரத்திற்கு முறையாவது மேற்கொள்வது metabolic health-ஐ மேம்படுத்த உதவும்.
மேலும், ஏற்கனவே பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் தங்களுடைய அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், அவ்வப்போது மருத்துவரின் ஆலோசனையுடன் தொடர் கண்காணிப்பு செய்வது நல்லது.மருத்துவரின் முக்கிய அறிவுரைபித்தப்பை கற்கள் என்பது பயப்பட வேண்டிய நிலையும் அல்ல; அலட்சியப்படுத்த வேண்டிய விஷயமும் அல்ல. சரியான புரிதலும், தொடர் கண்காணிப்புமே பாதுகாப்பான அணுகுமுறை ஆகும்.



