
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் கிரகங்களுக்கு உட்பட்டவை. அதுபோலவே, ஒவ்வொரு உயிருக்கும் உள்ள நலங்களும் கிரகங்களுடன் தொடர்புடையதாகவே உள்ளது. மனம் பாதிக்கப்பட்டாலும், உடல் பாதிக்கப்பட்டாலும் அசுப கிரகங்களின் தொடர்புகள் ஏற்பட்டாலும் கிரகங்களின் ஆற்றல்களால் நோயாக மாற்றமடைகிறது. எது எவ்வாறாயினும் நலத்த பெறுவதற்கான நல்முயற்சிகள் நம்முடையதே.
கிரகங்கள் நோயை சுமந்து வருவதில்லை. ஆனால், கிரகங்களின் ஆற்றல்களில் ஏற்படும் மாற்றங்கள் நம்மை நெருங்கும் பொழுது அதனால் ஏற்படும் மாறுபட்ட ஆற்றல்களை தாங்கும் சக்தி நமக்கு இல்லை. அதனை எவ்வாறு கையாளுவது என்பதே மருத்துவ ஜோதிடத்தின் அடிப்படையாகும்.ஒரு மனிதனின் பிறப்பு ஜாதகத்தின் அமைப்பும் கோட்சாரத்தின் அமைப்பும் மாறுபடும் பொழுது அதுவும் நோயாக உருவெடுக்கிறது.
கோட்சாரத்தின் அடிப்படையில் நாம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளையும் நம்மை நிர்வகித்துக் கொள்வதற்கான மூலத்தையும் அறிந்து கொள்வோம். அத்தியாவசிய தேவைகளுக்கு சின்னச்சின்ன பரிகாரங்களை செய்யலாம். ஆனால், கண்டிப்பாக மருத்துவரை நாடுவது சிறப்பு தரும். சில நேரங்களில் பரிகாரங்கள் செய்து கொண்டே மருத்துவத்தை கையாளும் பொழுது சிற்சில தடைகள் விலகி மருத்துவத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு என்பதே அனுபவம்.
மேஷம் ராசிக்காரர்களுக்கு சில மனசஞ்சலங்களும் விரயங்களும் உடல் உபாதைகளும் ஏற்படும் காலமாக உள்ளது. உங்களின் சந்திரனுக்கு நெருக்கத்தில் சனி உள்ளதால் இந்த மாற்றங்கள் ஏற்படும். ஆகவே, தியான வழிபாடு மற்றும் அடிக்கடி சோர்வுகளும் ஏற்படும். குழந்தைகள், ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். இதனால், சிற்சில உபாதைகள் தவிர்க்கப்படும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மனசோர்வும் சோம்பலும் தூக்கமும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு சித்தா அல்லது ஆயுர்வேத மருத்துவத்தை நாடலாம். தாயிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு.மிதுனம் ராசிக்காரர்களுக்கு பல் தொடர்பான பிரச்னைகள் அல்லது மூட்டு தொடர்பான பிரச்னைகள் வரலாம். அடிக்கடி கால்சியம் தொடர்பான பிரச்னை ஏற்படும். சிலருக்கு கால் இடறி விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடலில் அதீத உஷ்ணம் தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். கவனம். சைனஸ் பிரச்னைகள் ஏற்படலாம்.
கடகம் ராசிக்காரர்களுக்கு உடலில் நீர்அதிக மாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆகவே, வாரத்தில் ஒரு நாள் விரதம் இருந்து துளசி தீர்த்தத்தை அருந்துவது நன்மை உண்டாக்கும். சிலருக்கு வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படலாம்.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு அதீத வேலைப்பளு மற்றும் மனதில் சில குழப்பத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். இரவில் சரியான நேரத்தில் தூங்குவதாலும் காலையில் யோகா தியானம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவதாலும் நன்மைகள் ஏற்படும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு அதீத அலைச்சல் மன உளைச்சல் மற்றும் தேவையற்ற வேலைகளில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படும். தாயின் உடல்நிலையிலும் உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கால்நடைகளுக்கு உங்களால் முடிந்தளவு உணவு கொடுங்கள். .
துலாம் ராசிக்காரர்களுக்கு சுகம் பலப்படும். ஆனால், ராகு உள்ளே பயணிப்பதால் சிற்சில குழப்பங்கள் மற்றும் மாற்றங்கள் இருக்கக்கூடும். ராகு காலத்தில் வயதானவர்களுக்கு உணவு வாங்கித்தரலாம். சிற்சில உடல் பிரச்னைகள் பெரிதாகாமல் இருக்கும்.
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உங்களின் கண் மற்றும் முகத்தில் கருப்பான சில தழும்புகள் ஏற்படலாம். திடீர் பிரச்னைகள் வந்து ஏன் என்ற காரணம் தெரியாமல் உங்களுக்கு குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். காலபைரவரை வழிபடுவது மிகுந்த கஷ்டத்தில் இருப்போருக்கு உங்களால் முடிந்த பேருதவி செய்வது நன்மை தரும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு நான்கில் சனி இருந்து சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம். தாயின் வழியே மருத்துவச் செலவு உண்டு. காக்கைக்கு உணவளியுங்கள். நன்மை உண்டு.
மகரம் / கும்பம் ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் ஆட்சி வீடாக இருந்தாலும் வீட்டில் உள்ள மற்றவர்களின் பிரச்னைகளுக்கு தலை கொடுக்கக்கூடிய உங்களின் மனைவியை நலமாக பார்த்துக் கொள்வது உங்களின் பொறுப்பு. முதியோர்களுக்கு தொண்டு செய்யுங்கள்.
மீனம்ராசிக்காரர்களுக்கு சில மனவருத்தங்களுக்கும் உடல் உபாதைகளும் இக்காலத்தில் இருந்தாலும் வியாழன் பார்வையால் நன்மை பெறுகிறீர்கள். இடம் மாற்றம், தொழில் மாற்றம் நிகழலாம். காலணி இல்லாதவர்களுக்கு காலணி வாங்கித்தாருங்கள். நன்மை ஏற்படும்.



