தலைநகர் பாங்காக்கின் கிழக்கு பகுதியில் எண்ணெய் கிடங்கில் வெடிவிபத்து

 

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் கிழக்கு பகுதியில் ஃபிரா கனோங் பாங் நா பகுதிக்கு அருகே சுகும்விட் சாலையில் பாங்சாக் என்ற நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது.இங்கு நேற்று உள்ளூர் நேரப்படி, பிற்பகல் 3 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது.

இதனால் வானுயர தீப்பிழம்புகள் எழுந்ததால் அந்த பகுதியே வெப்ப மண்டலமாக மாறியது.மேலும் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். இந்த வெடி விபத்தின் அதிர்வுகள் பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கட்டிடங்களிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 9 பேர் காயமடைந்தனர்.