
AI தொழில்நுட்பத்தின் உதவியால் புற்றுநோய், அல்சைமர் நோய், இதய நோய் மற்றும் மனநலப் பிரச்சினைகள் ஆகியவை இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் “கடந்த காலத்து பிரச்சனைகளாக மாறும் என நினைக்கிறேன்” என ஆந்த்ரோபிக்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடே கூறியுள்ளார்.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஐபிஓ தொடர்பான விளம்பர வீடியோவில் பேசிய அவர், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது உயிரியல் ஆராய்ச்சி, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் நோய்களைப் புரிந்துகொள்ளும் வேகத்தை வியத்தகு முறையில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். “நான் குறிப்பிட்டிருக்கும் நோய்கள் ஒன்றும் அதிகம் அறியப்படாத பிரச்சனைகள் அல்ல; அவை உலக முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களை பாதிப்பவை தான். எனினும் கூட அவற்றில் சில இன்றுவரை மருத்துவத்துறையின் மிகக் கடினமான சவால்களில் ஒன்றாகவே இருக்கின்றன.”
AI தொழில்நுட்பத்தை நாம் இன்னும் கூர் தீட்டி சரியாக பயன்படுத்தினால், பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மை ஆட்டி வைக்கும் மருத்துவ பிரச்சனைகளை, சரி செய்ய கூடிய ஒரு அற்புத யுகத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்றும் அமோடி கூறி உள்ளார்.



