128 (பகவத்கீதை உரை)இந்து நூல் படி அனன்ய பக்தி

 

 

பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தின் சாராம்சத்தை ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம் – சரணாகதி. அதாவது, பரம்பொருளிடம் பரிபூரண சரணாகதி. இதை அடைவது எவ்வாறு? அது எல்லோருக்குமே சாத்தியமா? அவ்வாறு சரணாகதி அடைவதற்குத் தகுதி ஏதேனும் இருக்கிறதா, அப்படியானால் அது அல்லது அவை என்ன?இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தருகிறது ‘ஞான விஞ்ஞான யோகம்‘ என்ற இந்த ஏழாவது அத்தியாயம்.

பகவத் கீதைக்கு உரை இயற்றிய ஆசார்ய வினோபா பாவே, இந்த ஏழாம் அத்தியாய துவக்க உரையில், இறைவனிடம் சரணடைய முயற்சிப்பதை பக்தியின் ஆரம்ப நிலை என்று குறிப்பிடுகிறார். சராசரி மனித வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஓர் உபாயமாக சரணாகதி தத்துவம் போதிக்கப்படுகிறது என்கிறார். உலகியல் பொருட்கள் தரும் இன்பங்கள் எல்லாம் தற்காலிகமானவைதான். அவை மேன்மேலும் இன்பத்தைத் தேடும் துன்பத்தைதான் அளிக்கின்றன. உண்மையான, நிரந்தரமான மகிழ்ச்சி நிலைத்திருக்க பக்தி மார்க்கம் ஒன்றே சரியான வழி.

இறைவனின் தூய பிரகாசத்தையும், படைப்பின் ரகசியத்தையும், அடுத்தடுத்துப் பிறவி எடுப்பதன் நோக்கத்தையும் உணர்ந்த ஒருவருக்கு, அவருடனேயே உழன்று கொண்டிருக்கும் உலகியல் விஷயங்கள் எல்லாம் மிகவும் அற்பமானவையாகவே தோன்றும்; எங்கும், எதிலும், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் அவரால் இறைவனைக் காண முடியும்!கரை ஓரத்தில் அலைகளால் ஆர்ப்பரித்தாலும், நடுக்கடலின் கம்பீரத்தில் இறைவனின் பெருமையை அவரால் காண முடியும்; பசுவிடம் பகவானின் மென்மையையும், பூமியிடம் பொறுமையையும் அவரால் உணர முடியும்.பக்தி இசை கேள்

காக்கைச் சிறகின் கருமையில், மரங்களின் பச்சைப் பசுமையில், கேட்கும் ஒலிகளில், செந்தழல் வெம்மையில், நா ருசிக்கும் பண்டங்களில் எல்லாவற்றிலும் பரம்பொருளின் அம்சங்கள் திகழ்வதை உள்ளம் சிலிர்க்க உணர முடியும்.இனிப்புப் பொருட்கள் விற்கும் கடையில் உள்ள பல உருவ, பல வண்ண இனிப்புகள் எல்லாவற்றுக்குமே ஒரே ருசிதான் – இனிப்புதான் – ஆதாரம் என்பதை நிச்சயமாக அவர் அறிகிறார். அந்த ஒரே ருசி இறைவன்தான் என்பதை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்.

தனக்கு வரும் தீமைகள் எல்லாமே இறைவனின் சோதனைத் திட்டங்கள்தான் என்று உணர்ந்து அமைதியுறுகிறார். இந்த தெய்வீக உள்நோக்கு, எல்லையற்ற, பரமானந்த நிம்மதியை அளிக்கிறது. அந்த படைப்பாளனின் விசித்திரமான, விவரிக்க இயலாத ஆற்றலை, இவ்வாறு பக்தி செலுத்தும்போதுதான், அதாவது பக்திப் பாதையில் முன்னேறும்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது.தத்துவம் அறி

பக்திப் பாதை என்பது வேறொன்றும் இல்லை, சரணாகதி என்ற இலக்கை அடைவதுதான். இந்தப் பயணத்தில் ஒருவருடைய அகந்தை, சுயநலம், அறியாமை எல்லாமும் ஆவியாகி மறைந்து விடுகின்றன. எந்த நிபந்தனைக்கும் ஆட்படாத, எந்தத் தயக்கமும் இல்லாத இந்த சரணாகதிதான், பிறவி என்னும் பிணியிலிருந்து ஒருவரை முற்றிலுமாக விடுவித்து இறைவனுடன் ஒன்றச் செய்கிறது.

பரா பிரகிருதி என்ற இறைவனின் உன்னதமான, யாராலுமே கணிக்க முடியாத, மதிப்பிடவும் முடியாத, ஏன் முழுமையாகப் புரிந்து கொள்ளவும் முடியாத சக்தியை ஒரு பக்தனால் சரணாகதி பாவத்தில் அறிய முடியும். அதற்கு அபரா பிரகிருதி என்பதான, இந்த உலகத்திற்கும், வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கப் பழக வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அபரா பிரகிருதியை இயக்குவதே பரா பிரகிருதிதான்! அந்த இயக்கத்துக்குள் உழன்று கொண்டிருப்பவர்களை இந்த உண்மையைப் புரிந்து கொள்ள வைப்பதுதான் பக்தி மார்க்கம், சரணாகதி தத்துவம்.இந்து நூல் படி

சுயநலத்துக்காகப் பரம்பொருளை வழிபடுபவர்கள், ஞானஒளி காண்பதற்காக வழிபடுபவர்கள் என்று இரண்டு சாதிகள்தான் பக்தி மார்க்கத்தில் இருக்க முடியும். வழிபடுபவர்களும் செம்மையான மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அதாவது, தங்கள் இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், ஆபத்திலிருந்தும், நோய்களிலிலிருந்தும், துயரங்களிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் மட்டுமே பகவானின் துணையைத் தேடுபவர்களும் வழிபடுபவர்கள்தான் – ஆனால் இவர்கள் சுயநலவாதிகள்.

பரம்பொருளோடு கலந்துவிட வேண்டும் என்ற எண்ணமும், அந்த இறைவனை அறிந்து கொள்ள முற்படும் விவேகமும்தான் உண்மையான பக்தியின் இலக்கணம். இதை உணர்ந்தவர்கள் இரண்டாம் சாதியினர். இறைவனின் மாயா விநோதங்களை யாராலும் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ஆனால் அவனை சரணாகதி அடைந்து விட்டால், அறியாமை நீங்கி, அந்த மாயைகளில் ஒருவர் தம் வசம் இழந்து விடுவார்.‘‘விருப்பு – வெறுப்பு எனும் இருமையிலிருந்து விடுபட்டு அத்யாத்மம், அதிதெய்வம், அதியக்ஞம், அதிபூதம் எனும் தத்துவங்களை அறிந்தவர்கள் என்னிடம் பக்தி செலுத்தி மோட்சம் என்ற வீடு பேற்றை அடைகிறார்கள்,‘‘ என்பது பகவானின் வாக்கு.பக்தி இசை கேள்

 

‘‘அர்ஜுனா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னிடம் முற்றிலுமாக அடைக்கலம் புகுந்தவனாய், எந்த ஐயமும் இன்றி, என்னை முழுமையாக அறிவது எவ்வாறு என்பதை நானே சொல்கிறேன், கேட்டுக்கொள்.‘‘விஞ்ஞானத்தோடு கூடிய இந்த ஞானத்தை முழுமையாக நான் உனக்குச் சொல்கிறேன். இதை நீ அறிந்து கொண்டாயானால், இதற்குப் பிறகும் அறிய வேண்டியது என்று உனக்கு எதுவும் இருக்காது.’’‘என்னிடம் பிரேமையுடன் விளங்குவாயாக,‘ என்று அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார் கிருஷ்ணன். சந்தேகத்துக்கு இடமில்லாத பிரேமை அது. ஆனால் அமானுஷ்யமான தெய்வசக்தியிடம் அவ்வாறு பிரேமை கொள்வது சாத்தியமா?தத்துவம் அறி

நிச்சயமாக சாத்தியம்தான். ஏனென்றால், ஏதோ நற்பலன், எப்போதோ கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும், பிரேமைதானே? அந்த நற்பலனும் இப்போதைக்கு அமானுஷ்யம்தானே? நம் கற்பனைக்கேற்ப, நம் எதிர்பார்ப்புக்கேற்ப அந்த நற்பலன் அமைந்து விடுமா? அது எவ்வாறு கிட்டும் என்பதெல்லாம் யாருக்குமே தெரியது. நம் திட்டமெல்லாம் சரிதான், அந்த நற்பலனை நோக்கி நம் நகர்தல் எல்லாமும் சரிதான். நம் நம்பிக்கையும் சரிதான். ஆனாலும் அந்த எதிர்பார்ப்பு கைகூடும்வரை அது அமானுஷ்யம்தானே?

இப்படி லௌகீக மாயைகளில் தீவிர கவனம் செலுத்தும் நாம், அந்த மாயைகளை உருவாக்கும் பரம்பொருளிடம் மட்டும் ஏன் சந்தேக அடி எடுத்து வைக்க வேண்டும்? ‘நீ என்னை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், நான் உன்னை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பேன்‘ என்ற இறைவனின் ஆறுதல் எத்தனை தூரத்துக்கு ‘உண்மை’?இந்து நூல் படி

குடும்பத்தாருடன் அன்பு பாராட்டு கிறோம். அவர்கள் ஸ்தூலமாக நம் எதிரே நிற்பதால் அது சாத்தியமாகிறது. அவரே வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருந்தாலும் நம்மால் அன்பு பாராட்ட முடிகிறது. அது நம் நம்பிக்கை. அவர் எதிர்முனையில் இருந்து கொண்டு நம்முடன் தொலை பேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் எங்கிருந்தாலும் ஸ்தூலமாகவே இருக்கிறார். நம்புகிறோம். நம் பேச்சுக்கு அவரிடமிருந்து பதில் வருகிறது – அது அவர்தான் என்பதையும் நம்புகிறோம்.

இந்தப் புரிதலை, நம்பிக்கையை, இறைவனிடம் பேசும்போதும் கைக்கொள்ள வேண்டும். ஆனால் அது சத்தியமாவதில்லை; காரணம் எதிர் தரப்பின் ரியாக்ஷனை நம்மால் உணரமுடியாமல் போவதுதான்.‘என்னிடமிருந்து உற்பத்தியான எல்லாமும் என்னுடனேயே வந்து ஒடுங்கிவிடும்‘ என்கிறார் கிருஷ்ணன். ‘என் அசைவில்தான் இந்த அகிலமே அசைகின்றது. என் அசைவு நின்றால், இயற்கையும், உலக இயக்கமும் ஸ்தம்பித்துவிடும். ஆக, என்னிடமிருந்து வந்த நீ, என்னுடனேயே ஐக்கியமாகி விடவேண்டும் என்பதுதான் சரணாகதி தத்துவம்.’ ‘‘நான் அம்பு எய்தால் எதிரே இருப்பவர் மாண்டு போவார்களே!‘‘ என்று புலம்புகிறான் அர்ஜுனன்.டேட்டிங் யோசனைகள்

‘‘அதை நீ தீர்மானம் செய்யாதே. கணை தொடுக்கும் காரியத்தை மட்டும் செய். எதிராளிகள் இறந்துவிடுவார்களே என்பது உன் எதிர்பார்ப்பு. அப்படி நடந்தாலும் நடக்கலாம், நடக்காமல் போனாலும் போகலாம்! ஏனென்றால் நீ கணை விடுப்பதையும், அவர்கள் மாள்வதையும்,இரண்டையுமே தீர்மானிப்பவன் நான். ஆகவே, என்னிடம் உன் மனபாரத்தை ஒப்படைத்து விட்டு, செயலில் இறங்கு. விளைவை நான் பார்த்துக்கொள்கிறேன்,‘‘ என்று போதிக்கிறார் கிருஷ்ணன்.

உறவுகளிடையே பரிமாறிக் கொள்ளும் அன்புக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ‘என் அன்பைப் பெற அவன் தகுதியானவன், ஆகவே நான் அன்பு செலுத்துகிறேன்,’ என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளலாம். பதிலுக்கு அன்பு செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்த பாசத்தில் இல்லைதான். ‘அன்பு செலுத்துவது என்பது என் கடமை. நான் அதைத்தான் செய்கிறேன். இதற்குக் கைம்மாறு எதிர்பார்ப்பது கேவலம்,‘ என்ற தியாக உணர்வின் எதிரொலிதான் இது.

கணவனும், மனைவியும் இல்லறத்தில் ஈடுபட்டு பல வருடங்கள் இனிமையாக வாழ்கிறார்கள். மூப்பு காரணமாக கணவன் இறக்க நேரிடுகிறது. இதை அறிந்த மனைவி அக்கணமே தானும் உயிர் நீத்து விடுகிறாள். இது முற்றிய அன்பின் அடையாளமா? தன்னிச்சையாக மனைவியின் உயிர் பிரிகிறது. இது ‘சதி‘ அல்ல; யாருடைய நிர்ப்பந்தமும் இல்லை. எதிர்கால வாழ்வின் மீது எந்த அவநம்பிக்கையும் இல்லை, சோக அவலமும் இல்லை. ‘அவரோடு வாழ்ந்ததே போதும்,‘ என்ற நிறைவான மனப்பக்குவம்.பக்தி இசை கேள்

எந்த அடிப்படையில் இப்படி ஒரு சூழல் உருவாக முடியும்? தியாகம்தான். பரஸ்பரம் எல்லாவற்றிலும் இணைந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட்ட திருப்திதான். இதேபோல பால்ய வயது முதல் பல்லாண்டுகள் உள்ளத்தால் நெருங்கி வாழும் நண்பர்களுக்கிடையேயும் நிகழ்வதுண்டு. இதுவும் அதே தியாக உணர்வுதான். கணவன் – மனைவி ஒரு நிமிடம் கூட ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்தபின் இவ்வாறான முடிவு நிகழும்போது, நண்பர்களிடையே, பின்னாட்களில் முக தரிசனம் இன்றியே அவரவர் குடும்ப, வாழ்க்கைச் சூழலால் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் வாழ நேர்ந்தாலும் இப்படி ஒரு முடிவு நிகழ்வதுதான் குறிப்பிடத்தக்கது. ‘வீ வாண்ட் டு லிவ் செபரேட்லி டுகெதெர்’ (We want to live separately together) என்ற தத்துவம். ‘நீ இங்கு நலமே, நான் அங்கு நலமா?‘ என்ற பரிபூரண சரணாகதி.

அதேபோல இந்த ‘அனன்ய பாவத்’தை இறைவனிடம் கொள்வதுதான் அவருடன் இரண்டறக் கலப்பதற்கான உத்தமமான வழி. தனக்கு பகவானை விட்டால் வேறு புகலிடம் இல்லை, மாற்று இல்லை என்று இறைவனையே முற்றிலுமாகப் பற்றிக் கொள்ளும் பக்திநிலை. இந்தத் தத்துவத்துக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் பகவான் ரமண மகரிஷி. அவரைப் பொறுத்தவரை அவர் வேறு, இறைவன் வேறு அல்ல; ‘அவனே நான்’ என்ற அனன்ய பாவம் கொண்டிருந்த மகான் அவர்.தத்துவம் அறி

‘‘தாயாரை தெய்வமாக நினைக்க முடியுமானால் இதையே திருப்பி வைத்துப் பார்க்கும்போது தெய்வத்தைத் தாயாராக நினைக்க முடியும். சர்வ லோகங்களையும் படைத்துக் காத்துக் கொண்டிருக்கிற மகாசக்தியைத் தாயாராக நினைக்கும்போது ‘அம்பாள்‘ என்கிறோம். எல்லாமுமாக ஆகியிருக்கிற பரமாத்மா, நாம் எப்படி நினைத்தாலும், அப்படி வந்து அருள் செய்கிறது. எந்த ரூபமாகத் தியானித்தாலும் அப்படியே வந்து அநுக்கிரகம் செய்கிற கருணை பரமாத்மாவுக்கு உண்டு. அப்படி சாக்ஷாத் பரப் பிரம்மமே தாயாகி, அம்பிகையாய இருந்து கொண்டு நமக்கு அநுக்கிரகம் செய்ய வேண்டுமென்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வருகிறது,‘‘ என்கிறார் காஞ்சி மஹா ஸ்வாமிகள். இதுவே அனன்ய பக்தி – சரணாகதி.